வாக்குச்சாவடியில் திடீர் துப்பாக்கி சூடு!! அச்சத்தில் வாக்காளர்கள்!!
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்ட வாக்குப் பதிவாக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் தங்களது ஜனநாயக கடமையினை செய்தனர். இந்நிலையில் மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக சட்டசபை வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மூன்று கட்டங்கள் 91 தொகுதிகளில் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று நான்காம் கட்டமாக 44 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் தங்களது வாக்கினை பதிவு செய்ய வாக்குச்சாவடிக்கு வந்த மையம் உள்ளனர்.
இந்த நிலையில் மேற்கு வங்காளத்தில் கூச் பெஹார் பகுதியில் வாக்குச்சாவடி எண் 174 இல் திடீரென வன்முறை ஏற்பட்டது. இதனால் வாக்குச்சாவடியின் பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாப்பு வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பொதுமக்கள் 4 பேர் உயிரிழந்துள்ளனர். உள்ளூர் கட்சிக்காரர்கள் வாக்குச்சாவடியில் வன்முறையை ஏற்படுத்தியதாகவும் வன்முறையை தடுக்கவே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும் பாதுகாப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்த அறிக்கை சமர்ப்பிக்க வேண்டு என்று தேர்தல் ஆணையம் உத்தரவு அளித்துள்ளது.
இந்த சம்பவத்தால் பொதுமக்கள் வாக்குகளை பதிவிட வாக்குச்சாவடிக்கு வருவதற்கு அஞ்சுகின்றனர். காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.