ப்ரீ குழம்பு கேட்ட காவல் அதிகாரி! தர மறுத்ததால் ரூ.5000 பைன்!

0
137
Police officer who asked for pre-broth! Rs.5000 fine for refusing quality!
Police officer who asked for pre-broth! Rs.5000 fine for refusing quality!

ப்ரீ குழம்பு கேட்ட காவல் அதிகாரி! தர மறுத்ததால் ரூ.5000 பைன்!

நாளுக்குநாள் போலீசாரின் அரஜாகம் எல்லைத்தாண்டி நடந்து வருகிறது.அந்தவகையில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பிரதமர் நரேந்திரமோடியுடன் தொற்று அதிகமுள்ள மாநில  முதலமைச்சர்கள் கலந்தோசித்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வெளியிட்டனர்.அந்த ஊரடங்கு கட்டுப்பாட்டில் இரவு 11 மணி வரை மட்டுமே உணவு விடுதிகள் நடத்த அனுமதி தந்துள்ளனர்.அந்தவகையில் கோவையில் ஓர் ஹோட்டலில் இரவு 10 மணிக்கு மேலாக உணவகம் நடத்தி வந்துள்ளனர். அங்கு சென்ற காவல் ஆய்வாளர் கடையை மூடம்படி பொறுமையாக கூறாமல்,

போலீஸ் என்ற அதிகாரத்தை வைத்துக்கொண்டு அங்கு சாப்பிட்டுக்கொண்டு இருந்தவர்களை சரமாரியாக தாக்கினார்.அதன்பின் அக்கடையின் உரிமையாளரை பெண் என்றும் பாராமல் அவரது தலையிலேயே ரத்தம் வரும் அளவிற்கு லத்தியால் அடித்து துன்புறுத்தியுள்ளார்.அதனையடுத்து காஞ்சிபுரம் ஹோட்டல் ஒன்றில் காவல் அதிகாரி ஒருவர் இலவசமாக சாம்பார் கேட்டுள்ளார்.அந்த கடை உரிமையாளர் சாம்பார் தர மறுத்துள்ளார்.

இதனை மனதில் வைத்துக்கொண்டு அடுத்த நாள் அந்த கடையில் தனிமனித இடைவெளி கடைபிடிக்கவில்லை என்று முதலில் ரூ.500 அபராதம் செலுத்தும்படி கேட்டுள்ளார்.அப்போது அங்கிருந்த காவலர் அதாவது (சாம்பார் கேட்ட காவலர்) இவருக்கு ரூ.500அபராதம் போடக்கூடாது.ரூ.5000அபராதம் போடா வேண்டும் என கூறியுள்ளார்.

இந்த அபராதம் குறித்து காஞ்சிபுரம் எஸ்.பி.யிடம் அப்பகுதி வியாபார சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர்.அதற்கு அந்த காவலர் தரப்பில் கூறுவது,இலவசமாக சாம்பார் கேட்கவில்லை பாத்து ரூபாய்க்கு தான் சாம்பார் கேட்டேன் என அவர் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

Previous articleகொரோனாவுக்கு முடிவு இல்லை… உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி ரிப்போர்ட்!
Next articleகாலணி வாங்கவே காசு இல்லை… திறமையால் முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் பந்து வீச்சாளர்!