14 கோடியை நெருங்கியது கொரோனா வைரஸ்! ஊரடங்கு போடப்படும் நிலை!

0
131
India 1st in Corona attack! Number of victims touching peak!
India 1st in Corona attack! Number of victims touching peak!

14 கோடியை நெருங்கியது கொரோனா வைரஸ்! ஊரடங்கு போடப்படும் நிலை!

கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக தொடர்ந்த வண்ணமே தான் உள்ளது. தற்போது கொரோனாவின் 2 வது அலை உருவாகியுள்ளது.இது முதல் அலையை காட்டிலும் மிகவும் அபாயகரமானது.மக்களிடம் மிக விரைவாக பரவி வருகின்றது.அதுமட்டுமின்றி மக்களை இத்தொற்றிலிருந்து பாதுகாக்க மத்திய அரசும் மாநில அரசுகளும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.அந்தவகையில் பிரதமர் நரேந்திரமோடி அதிக தொற்று உள்ள மாநிலங்களின் முதல்வர்களை கண்டு ஆலோசனைக்கூட்டம் நடத்தினார்.

அந்த ஆலோசனைக்கூட்டத்தின் முடிவில் தமிழ்நாட்டிற்கு பல வித கட்டுப்பாடுகளை போட்டனர்.மக்கள் கூட்டம் கூடும் அனைத்து இடங்களிலும் 50% மட்டுமே அனுமதிக்க வேண்டும்.திருவிழாக்கள்,மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த தடை விதித்துள்ளது.உழவர்சந்தைகளில் சில்லறை வியாபாரிகளுக்கும் தடை விதித்துள்ளது.இதுபோல பல தடைகளை மாநில அரசு நிறுவியுள்ளது.

இவ்வாறு பல கட்டுபாடுகள் நிறுவியும் கொரோனா தொற்று குறைவது சிறிதும் குறைந்த பாடு இல்லை. இந்தியாவில் மட்டும் ஒர் நாளில் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,027 ஆக உள்ளது.அதே போல கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால் நாடு உழுவது 10 மற்றும் 12-ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது.அந்தவகையில் அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாத்தித்தவர்களின் எண்ணிக்கை 32,149,223 ஆக உள்ளது.

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 173,152 ஆக உள்ளது.அதற்கடுத்து இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,070,890 ஆக உள்ளது.அதற்கடுத்து பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 173,152 ஆக உள்ளது.பிரேசிலில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 13,677,564 ஆக உள்ளது.அதற்கடுத்து பிரேசிலில் கொரோனா தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 362,180 ஆக உள்ளது.

தற்போது கொரோனா தொற்று முன்பை காட்டிலும் அதிக அளவு பரவி வருகிறது.இந்நிலை நீடித்தால் ஊரடங்கு போடப்படும் என கூறிவருகின்றனர்.ஆனால் மத்திய அரசு கூறுவது,கொரோனா தொற்று அதிகரித்தாலும் கொரோனாவை தடுக்க தடுப்பு நடவடிக்கைகள் போடப்படுமே தவிர ஊரடங்கு போடப்படாது என கூறுகின்றனர்.ஆனால் இந்தியா கொரோனா பாதிப்பில் 3ஆம் இடத்திலிருந்து 2-ம் இடத்திற்கு வந்துள்ளது என்பது குறிப்பிட தக்கது.அதுமட்டுமின்றி தற்போது கொரோனா வைரஸ் 14 கோடியை தாண்டியுள்ளது என உலக சுகாதார மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Previous articleஅனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசி நிச்சயம் கிடைக்கும்! பிரதமர் மோடி உறுதி!
Next articleரத்துசெய்யப்படுமா +2 பொதுத்தேர்வு? இன்று முக்கிய ஆலோசனை!