அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசி நிச்சயம் கிடைக்கும்! பிரதமர் மோடி உறுதி!

0
64

நேற்றைய தினம் அனைத்து மாநில ஆளுநர்கள் உடனமர் நரேந்திர மோடி நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். இதில் உரையாற்றிய அவர் இந்தியாவில் நோய்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்த நோய் தொற்றுக்கு ஏற்ற வகையில் அந்தந்த மாநிலங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. அதேசமயம் இந்த தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எல்லாவற்றையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

நேற்று நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாநில ஆளுநர்கள் உடனும் சேர்ந்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவும் பங்கேற்றார். அதோடு மத்திய அமைச்சர்கள் அமித்ஷா , அஹர்ஷவர்தன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். நோய்த்தொற்று தொடர்பாக மாநில ஆளுநர்கள் உடன் ஆலோசனை கூட்டம் நடத்துவது இதுதான் முதல் முறை என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவது, தடுப்பூசி போடுவதை அதிகப்படுத்துவது போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி உரையாடும்போது 10 கோடி தடுப்பூசிகளை மிக வேகமாக செலுத்திய நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

4 தினங்கள் தடுப்பூசி திருவிழாவின் மூலமாக தடுப்பூசி செலுத்தப்படுவது அதிகரித்திருக்கிறது. புதிதாக தடுப்பூசி மையங்கள் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்து இருக்கின்றன. எல்லா மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இந்த தடுப்பூசி கிடைத்ததை மத்திய அரசு உறுதி செய்யும் என்று தெரிவித்திருக்கிறார்.

பொருளாதாரத்தின் ஒரு முக்கிய பங்குதாரர்களாக இருக்கும் இளைஞர்கள் இந்த நோய் திட்டத்திற்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் அவற்றிற்கு எதிரான போராட்டத்தில் மக்களை ஈடுபடுத்துவது அனைத்து மாநில ஆளுநர்கள் ஒரு முக்கிய பங்குதாரர்களாக இருப்பதுடன் மாநில அரசுகள் ஒன்றிணைந்து அரசை வழிநடத்தும் ஆளுநர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கையின் காரணமாக மாநிலங்கள் தேசிய உறுதிப்பாட்டை வலுப்படுத்த வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

மாநில அரசுகளுடன் சமூக நிறுவனங்கள் தடையில்லாமல் ஒத்துழைப்பை கொடுத்து தடுப்பூசி மருந்துகள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் ஆளுநர்கள் இருக்க வேண்டுமென்று தெரிவித்திருக்கிறார்.இதனைத் தொடர்ந்து பேசிய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கடந்த வருடம் இந்த தொடருக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒன்றிணைந்து செயல்பட்டால் அதன் மூலமாக வெற்றிபெற இயன்றது. இது நமக்கு கிடைத்த பாடம் இந்த வருடமும் அரசியல் வேறுபாடு இல்லாமல் எல்லோரும் ஒன்றிணைந்து செயல்பட்டு இந்த நோயை எதிர்த்த முயற்சி செய்யவேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

சென்ற இரு வாரங்களில் 10 மாநிலங்களில் 85 சதவீத பாதிப்பும் 89% மரணங்களும் ஏற்பட்டிருக்கின்றன. இந்த மாநிலங்களுக்கு தனி கவனம் செலுத்த வேண்டும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அரசியல் சாசன தலைவர்களாக ஆளுநர்கள் இருந்து வருகிறார்கள். இந்த தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் ஆளுநர்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது என்று தெரிவித்தார்.