நீடிக்கும் கொரோனா பலி! தமிழகத்தில் 14 நாட்கள் பொதுமுடக்கம்!
கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக தொடர்ந்த வண்ணமே தான் உள்ளது. தற்போது கொரோனாவின் 2 வது அலை உருவாகியுள்ளது.இது முதல் அலையை காட்டிலும் மிகவும் அபாயகரமானது.மக்களிடம் மிக விரைவாக பரவி வருகின்றது.அதுமட்டுமின்றி மக்களை இத்தொற்றிலிருந்து பாதுகாக்க மத்திய அரசும் மாநில அரசுகளும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.அந்தவகையில் பிரதமர் நரேந்திரமோடி அதிக தொற்று உள்ள மாநிலங்களின் முதல்வர்களை கண்டு ஆலோசனைக்கூட்டம் நடத்தினார்.
அந்த ஆலோசனைக்கூட்டத்தின் முடிவில் தமிழ்நாட்டிற்கு பல வித கட்டுப்பாடுகளை போட்டனர்.மக்கள் கூட்டம் கூடும் அனைத்து இடங்களிலும் 50% மட்டுமே அனுமதிக்க வேண்டும்.திருவிழாக்கள்,மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த தடை விதித்துள்ளது.உழவர்சந்தைகளில் சில்லறை வியாபாரிகளுக்கும் தடை விதித்துள்ளது.இதுபோல பல தடைகளை மாநில அரசு நிறுவியுள்ளது.அந்தவகையில் கோவையில் விஜய் டிவி பிரபலம் இன்று செல்போன் கடையை திறந்து வைக்க சென்றார்.அவரை பார்க்க கூட்டம் கூடியதால்,சமூக இடைவெளி பின்பற்றாததால் அக்கடைக்கு சீல் வைத்துள்ளனர்.
இவ்வாறு பல கட்டுபாடுகள் நிறுவியும் கொரோனா தொற்று குறைவது சிறிதும் குறைந்த பாடு இல்லை. இந்தியாவில் மட்டும் ஒர் நாளில் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,027 ஆக உள்ளது.அதே போல கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால் நாடு உழுவது 10 மற்றும் 12-ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது.
அதற்கடுத்து நிர்மலா சீதாராமன் கூறியது,அதிக அளவு கொரோனா தொற்று பரவி வந்தாலும் அதை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்குமே தவிர நாடு முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்தாது எனக் கூறியுள்ளார்.அதேபோல சுகாதாரத்துறை செயலாளரும் ஊரடங்கு போடுவதை குறித்து முடிவுகள் தற்போது எடுக்க முடியாது எனவும் கூறினார்.
ஆனால் டெல்லியில் அதிக அளவு கொரோனா தொற்று பரவுவதால் இந்த வார இறுதி நாட்கள் முதல் முழு ஊரடங்கை அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜிரிவால் போட்டுள்ளார்.அதே போல் நம் தமிழ்நாட்டிலும் அதிக அளவு கொரோனா தொற்று பரவி வருவதால் தொற்றை கட்டுபடுத்த 14 நாட்கள் முழு பொது முடக்கம் போடும்படி மருத்துவர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பாக சுகாதாரத்துறை செயலாளருக்கு மனு கொடுத்துள்ளனர்.இந்த மனுவின் முடிவில் 14 நாட்கள் தமிழகத்தில் பொது முடக்கம் போடப்படும் என கூறுகின்றனர்.