இனி இரவு நேர ஊரடங்கு கிடையாது இனி 144 தான்! பிரதமர் நடத்தப்படும் திடீர் ஆலோசனைக்கூட்டம்!
கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வருகிறது.இந்த நிலையில் மக்கள் நலன் கருதி கொரோனா தொற்று அதிகம் உள்ள மாநிலங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளனர்.அந்தவகையில் அதிகம் தொற்று உள்ள மாநிலமான மகாராஷ்டிராவில் 15 நாட்களுக்கு 144 தடை விதித்துள்ளனர்.அதனையடுத்து டெல்லியில் ஓர் நாளில் மட்டும் 20000 மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருவதால் அங்கு வார இறுதி நாட்களில் மட்டும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.
தமிழ்நாட்டிலும் அதிக அளவு கொரோனா தொற்று பரவி வருவதால் நாளை முதல் இரவு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.அதுமட்டுமின்றி வார இறுதி ஓர் நாளில் மட்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.இந்தியாவில் தற்போது 24 மணி நேரத்தில் மட்டும் 2.71 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.இது அதிக அளவு தொடர்ந்து கொண்டே இருப்பதால் பிரதம் மோடி அவசர ஆலோசனைக்கூட்டம் நடந்துக்கொண்டிருக்கிறார்.இந்த ஆலோசனைக்கூட்டம் முடிவில் ஊரடங்கு தொடர்பாக தகவல்கள் தெரிவிக்கப்படும் என பேசி வருகின்றனர்.இதில் இரவு நேர ஊரடங்கு அகற்றப்பட்டு நாடு முழுவதும் 144 தடை போட வாய்புகள் உள்ளதாக பேசி வருகின்றனர்.