வாக்கு எண்ணிக்கை! திமுக தலைமை போட்ட அவசர மாநாடு!

0
91

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் இரண்டு வார காலம் மட்டுமே இருக்கின்ற சூழ்நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பொழுது திமுகவின் கட்சியை சார்ந்தவர்கள் எந்த அளவிற்கு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதற்காக ஸூம் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

கடந்த 2016ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது தமிழகத்தில் பல தொகுதிகளில் வெற்றி காண வாக்கு வித்தியாசம் ஆயிரத்திற்கும் குறைவாகவே இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சில தொகுதிகளில் 100 க்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றி தோல்வி முடிவானது.

ராதாபுரம் சட்டசபைத் தொகுதியில் தபால் வாக்குகளை எண்ணாமலேயே அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. என புகார் எழுந்தது. மேலும் இது போன்ற நேரங்களில் அதிகாரிகளை திமுகவை சார்ந்தவர்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு சென்ற சட்டசபை தேர்தல் நடந்தபோது வேட்பாளர்கள் உள்ளிட்ட யாரிடமும் இல்லை என்று பரவலாக பேசப்பட்டது.

அதிமுக பல இடங்களில் முன்னிலை பெற்று இருந்த ஒரு சூழ்நிலையில் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவினர் முன்னிலையில் இருந்த தொகுதிகள் பல கடைசி சமயத்தில் அதிமுக வசம் சென்றது. இதற்கு காரணம் கடைசி சமயத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்த திமுகவை சேர்ந்தவர்கள் தவறான முடிவுகளை எடுத்தது தான் என்று தெரிவிக்கப்பட்டது. ஒரு சில தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை முடிவதற்கு முன்னரே திமுகவின் பிரமுகர்கள் வெளியேறி விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆகவே தற்போது நடைபெற்ற சட்டசபை தேர்தல் முடிவுகளும் சென்றமுறை போலவே மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

குறைந்த வாக்கு எண்ணிக்கையில் வெற்றி தோல்வியை தீர்மானம் செய்யும் தொகைகளில் திமுகவின் முகவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என இம்முறை அந்த கட்சியின் தலைமையை ஒரு செயல் திட்டத்தை தயார் செய்து இருக்கிறது. அதோடு ஒவ்வொரு தொகுதிக்கு எனவும் தனித்தனியாக தேர்தல் வழக்குகளின் திறமையான வழக்கறிஞர்களை சட்ட ரீதியான பிரச்சனைகளுக்கு என பொறுப்பாளராக திமுக நியமனம் செய்து இருக்கிறது. அதோடு வழக்கறிஞர்கள் பலர் இந்த முறை திமுக வாக்கு எண்ணும் மையங்களில் முகவர்களாக பணியில் அமர்த்தப்பட இருக்கிறார்கள். இதன் மூலமாக கடைசி சமயத்தில் அதிகாரிகள் தெரிவிக்கும் விஷயங்களை சட்டப்படி சந்திக்க முடியும் என்று திமுக கருதுகிறது.

அந்த நேரத்தில் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 75 வாக்கு எண்ணும் மையங்களிலும் ஒவ்வொரு தொகுதி வாரியாக முகவர்களை பிரீதி செய்திருக்கிறது திராவிடர் முன்னேற்றக் கழகம் அவர்களுக்கு ஜூம் மாநாட்டில் வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினரும் மூத்த வழக்கறிஞருமான என் ஆர் இளங்கோவன் வாக்கு எண்ணும் மையத்தில் பணியமர்த்தப்பட போகும் திமுக முகவர்களுக்கு வகுப்புகள் எடுக்கவிருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதற்கென்று பிரத்யேக கையேடு ஒன்றும் திமுக சார்பாக தயார் செய்யப்பட்டு இருக்கிறது. அதில் வாக்கு எண்ணும் மையத்தில் என்னென்ன செய்ய வேண்டும், பல அதிகாரிகளை அனுமதிக்க கூடாது என்கிற விவரங்கள் இடம் பெற்றிருக்கின்றன. இந்த கையேடு அடிப்படையில் நடைபெறும் இந்த மாநாட்டில் எல்லாம் முகவர்களும் வாக்கு எண்ணிக்கைக்கு தயாராவது எப்படி என்று வழக்கறிஞர் இளங்கோ பாடம்.நடத்தவிருக்கிறாறாம்.