முதல்வரின் மகிழ்ச்சிக்கு தடைப்போட்ட முக்கியப்புள்ளி!

0
150

தமிழக சட்டசபை தேர்தலை பொறுத்தவரையில் திமுக இந்த முறை ஆட்சி அமைப்பதில் உறுதியாக இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் அவர்களுடைய நடவடிக்கை அந்த விதத்தில் தான் இருந்து வருகிறது.பிரசாந்த் கிஷோர் குடுத்த அறிக்கை ஒன்றை கையில் வைத்துக் கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மிகவும் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறார். எந்த துறைக்கு யாரை அமைச்சராக நியமனம் செய்வது போன்ற நடவடிக்கைகளில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்.

ஆனால் மறுபுறம் ஆளும் கட்சியான அதிமுகவோ தன்னுடைய தேர்தல் வியூகம் வகுப்பாளர் சுனில் மற்றும் உளவுத்துறை மூலமாக சில அறிக்கையை கைப்பற்றி அதில் ஆய்வு செய்து இருக்கிறது. அதன்படி மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும் என்று அந்த ரிப்போர்ட் தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஏப்ரல் மாதம் 19ம் தேதியான நேற்றைய தினம் குடலிறக்க அறுவை சிகிச்சைக்காக சென்னை அமைந்தகரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகிறார். இந்த விவகாரம் முன்னரே மருத்துவர்களின் ஆலோசனையோடு திட்டமிட்ட ஒன்றுதான் என்று தெரிவிக்கிறார்கள்.

இதற்கிடையில் முதல்வர் உடைய தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்துவரும் சுனில் அதிமுக கூட்டணி இந்த தேர்தலில் 85 முதல் 90 இடங்களில் வெற்றி பெறும் அதோடு 27 தொகுதிகளில் கடுமையான இழுபறி நிலவும் அதிலும் அதிமுகவிற்கு தான் அதிக தொகுதிகள் கிடைக்கும் என்று முதலமைச்சரிடம் ஒரு அறிக்கையை கொடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு மத்தியில் முன்னாள் உளவுத் துறை ஐஜி முதலமைச்சருக்கு நெருக்கமானவருமான சத்தியமூர்த்தி ஒரு தனி குழுவை அமைத்து ஆய்வு செய்து இருக்கிறார். தேர்தலுக்குப் பின்னரான கள நிலவரத்தை ஆய்வு செய்து அவர் முதலமைச்சருக்கு கொடுத்த ஆய்வறிக்கை ஒன்றில் 130 தொகுதிகள் அதிமுகவிற்கு வரும் என்று தெரிவித்திருக்கிறார்.

இதுபோன்ற சூழ்நிலையில் சற்று காலதாமதத்திற்கு பின்னர் மாநில அரசின் உளவுத்துறை அருகில் வாங்கியிருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மாநில உளவுத்துறை தேர்தல் முடிந்தவுடன் எந்த அறிக்கையையும் தாக்கல் செய்யவில்லையாம். ஆனால் சற்று ஆய்வு செய்த பின்னர் அறிக்கை கொடுப்பதாக முதலமைச்சரிடம் தெரிவித்து இருக்கிறார்கள் உளவுத்துறையைச் சார்ந்தவர்கள். அந்த நேரத்தில் தமிழக உளவுத்துறை முதலமைச்சருக்கு கொடுத்த அறிக்கையில் சுமார் 85 தொகுதிகள் அதிமுகவிற்கு உறுதியாக கிடைக்கும் சுமார் 40 தொகுதிகள் கடுமையான இழுபறியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், உளவுத்துறை அறிக்கையை வைத்துக் கொண்டு அவருக்கு நெருக்கமான அமைச்சர்களிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விவாதம் செய்திருக்கிறார். அந்த விதத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி இடமும் இந்த அறிக்கை தொடர்பாக பேசியிருக்கிறார். அந்த தொகுதிகள் பட்டியலை பெற்ற வேலுமணி தன்னுடைய குழு மூலமாக அந்த நாற்பது தொகுதிகளிலும் ஒரு பிரத்தியேக ஆய்வினை நடத்தியிருக்கிறார்.

அதன் பின்னர் முதலமைச்சரிடம் உரையாற்றிய வேலுமணி அந்த 40 தொகுதிகளில் 20 தொகுதிகளுக்கு மேல் நமக்குத்தான் என்று தெரிவித்திருக்கிறார். அதனால் நாம் நிச்சயமாக ஆட்சி அமைப்போம் இதில் எந்தவித சந்தேகமும் தேவையில்லை என்று முதல்வரிடம் நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார்.

இந்த சூழ்நிலையில்தான் தனக்கு நெருக்கமான மற்றொரு அமைச்சரான தங்கமணி இடமும் தொலைபேசியில் இதுதொடர்பாக உரையாற்றியிருக்கிறார் முதலமைச்சர். அதன்படி எனக்கு வருகின்ற அறிக்கை எல்லாம் தேவையான அளவு வெற்றியுடன் நாமே மீண்டும் ஆட்சி அமைப்போம் என்று தான் சொல்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.
முதல்வர் உடைய இந்த கருத்து தொடர்பாக தங்கமணி தனக்கு நெருக்கமானவர்களிடம் உரையாற்றும்போது முதல்வர் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறார் ஆனால் எனக்கு அந்த அளவிற்கு நம்பிக்கை இல்லை என்று மனம் திறந்து பேசியிருக்கிறார் தங்கமணி.

Previous articleமுதவர் பணியிலிருந்து 3 நாட்களுக்கு நீக்கம்!! நடந்தது என்ன??
Next articleவாக்கு எண்ணிக்கை நேரத்தை மாற்றிய தேர்தல் ஆணையம்! அதிரடி உத்தரவு!