தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய தகவல்! அரசியல் கட்சிகள் ஷாக்!

Photo of author

By Sakthi

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் கடந்த ஆறாம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இதனை தொடர்ந்து மே மாதம் இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்த சூழ்நிலையில், வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் மையங்களில் மர்மநபர்கள் வந்து செல்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

ஆனால் தற்சமயம் வாக்கு எண்ணிக்கை வைக்கப்பட்டிருக்கின்ற மையங்களில் காவல்துறையினர் மற்றும் தேர்தல் ஆணையத்தை சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் துணை ராணுவ படை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறது.

இந்த சூழ்நிலையில், வாக்கு எண்ணிக்கை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணைய அதிகாரி களிடம் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு காணொலிக் காட்சி மூலமாக ஆலோசனை நடத்தி இருக்கின்றார். அதன் பிறகு அவர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது நோய் தடுப்பு நடவடிக்கை காரணமாக, வாக்கு எண்ணிக்கை நிறைவடைய தாமதமாகலாம் என்று தெரிவித்திருக்கிறார்.ஆகவே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே மாதம் இரண்டாம் தேதி இரவு பன்னிரெண்டு மணிக்குள் எல்லா தொகுதிகளுகும் முடிவு அறிவிக்கப்பட்டுவிடும் என தெரிவித்திருக்கிறார் .