7 தமிழர்கள் விடுதலை: முதலமைச்சருடன்
மருத்துவர் இராமதாஸ் தொலைபேசியில் பேச்சு!
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அவர்கள் இன்று காலை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 தமிழர்களின் விடுதலை குறித்து பேசினார்.
7 தமிழர்களை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது குறித்தும், அதனடிப்படையில், 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்து தமிழக அமைச்சரவையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட தீர்மானத்தின் மீது கடந்த 370 நாட்களாக (ஓராண்டு 5 நாட்கள்) தமிழக ஆளுனர் மாளிகை எந்த நடவடிக்கையும் எடுக்காதது குறித்தும் முதலமைச்சர் பழனிசாமி அவர்களிடம் மருத்துவர் அய்யா அவர்கள் நினைவு கூர்ந்தார். 29 ஆண்டுகளாக சிறைகளில் வாடும் 7 தமிழர்களையும் விரைந்து விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
அதைக் கேட்டுக் கொண்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், 7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசு அனைத்து வகைகளிலும் நடவடிக்கை எடுக்கும் என உறுதியளித்தார் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை இச்செய்தியை வெளியிட்டுள்ளது.
மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.