நோய் தொற்று பாதிப்பு! புதிய உத்தரவை பிறப்பித்த தமிழக அரசு!

0
100

தமிழகத்தின் நோய் தொற்று தீவிரம் அடைந்து வருவதை முன்னிட்டு தமிழக அரசு அதனை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அதன்படி திருமண மண்டபங்கள், கோவில்கள், மசூதிகள், உள்ளிட்டவைகளுக்கு பலவிதமான கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்து இருக்கிறது.

அதேபோல சுமார் 7 மாதங்களுக்கு பின்னர் ஞாயிறு ஊரடங்கும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் பெரிய நகரங்களில் உள்ள முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி நிலையில் காணப்பட்டன. அன்றைய தினம் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டுமே தெரிந்த இருப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதைத் தவிர இறைச்சிக்கடைகள் எதற்கும் அன்று அனுமதி வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல தமிழகத்திற்கு வரும் மற்ற மாநில நபர்களுக்கு இ பாஸ் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அதே போல திரையரங்கு, உடற்பயிற்சி கூடங்கள், கூட்ட அரங்குகள், கேளிக்கை விடுதிகள், வணிக வளாகங்கள், போன்றவை இயங்குவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இந்த சூழ்நிலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் அதற்கு முந்திய நாளில் அதாவது சனிக்கிழமை அன்று காசிமேடு, சிந்தாதிரிப்பேட்டை ,மீன் மார்க்கெட் அதோடு இறைச்சிக் கடைகளிலும் முக கவசம் அணியாமல் சமூக இடைவெளியிலும் கடைபிடிக்காமல் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் நோய் தொற்று அதிகம் பரவும் என்பதால் தமிழக அரசு மேலும் ஒரு அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கிறது.

அதாவது தமிழ்நாட்டில் இருக்கின்ற எல்லா இறைச்சி கடைகளையும் சனிக்கிழமைகளிலும் மூட தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. மே மாதம் ஒன்றாம் தேதி மற்றும் இனிவரும் எல்லா சனிக்கிழமைகளிலும் மீன், கோழி போன்ற எந்த விதமான கடைகளும் இயங்க கூடாது இந்த உத்தரவை மீறி செயல்படுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து இருக்கிறது தமிழக அரசு.