மத்திய அரசின் முடிவு மாநில அரசின் நிதிச்சுமை அதிகரிக்கும்! முதல்வர் கடிதம்!

0
71

தற்போது நாடு முழுவதும் இந்த நோய் தொற்று அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் இணைந்து பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி தமிழகத்தில் பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கின்றன. அதே போல பல மாதங்களுக்குப் பின்னர் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மருந்து, காய்கறி, போன்ற அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து மற்ற எந்த கடைகளும் பெரிய அளவில் செயல்படுவதற்கு அனுமதி இல்லை என்று தமிழக அரசு அறிவித்து இருக்கிறது.

அதேபோல ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கண்டிப்பாக பின்பற்றப்படுகிறது. இதன்காரணமாக, ஞாயிற்றுக்கிழமைகளில் பெரிய நகரங்களில் இருக்கின்ற முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி நிலையில் காணப்படுகின்றன.

தற்போது இருக்கும் சூழ்நிலையில், தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் திண்டாடி வருகிறது. இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முன்பே ஒருமுறை இதுதொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் தமிழகத்திற்கான ஆக்சிசன் தேவை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதன் காரணமாக, ஸ்ரீபெரும்புதூரில் தயார் செய்யும் ஆக்சிஜனை வேறு மாநிலங்களுக்கு அனுப்பக்கூடாது என்று முதலமைச்சர் பிரதமர் நரேந்திர மோடியிடம் அந்த கடிதம் மூலமாக கோரிக்கை வைத்திருந்தார்.

அதே போல தமிழ்நாட்டின் ஆக்சிஜன் தேவையை மத்திய அரசு தவறாக கணக்கிட்டு இருக்கிறது என்று சுட்டிக்காட்டியிருந்தார். இந்த சூழ்நிலையில், தற்சமயம் தடுப்பூசி விலையை குறைப்பதற்கு மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார்.

அந்த கடிதத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருப்பதாவது, தமிழகத்திற்கு தேவைப்படும் தடுப்பூசிகளை மத்திய அரசு விரைவாக கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் கூடுதல் விலைக்கு விற்பதன் காரணமாக மாநில அரசுக்கு நிதிச்சுமை உண்டாகும் என்று தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.

அதோடு 18 முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கு தேவைப்படும் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்வதுடன் மத்திய அரசே இந்த நோய் தடுப்பூசிகளை கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.தடுப்பு மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான மாற்று வழிகளையும் மத்திய அரசு கண்டுபிடிக்க வேண்டும் எனவும், தடுப்பூசி விலையை குறைப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அந்த கடிதத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டிருக்கிறார்.