டோன்ட் வொரி நாங்க இருக்கோம்! இந்தியாவிற்கு கைகொடுத்த அமெரிக்கா!

0
188

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில, அரசுகள் மிகத் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன. உலகில் இந்த நோய்த்தொற்று முதலில் பரவத் தொடங்கிய போது இந்தியா அதனை முழுவதுமாக கட்டுப்படுத்துவதற்கு முயற்சி செய்தது. அதன் காரணமாக, பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அதன்படி இந்தியா மெல்ல மெல்ல அந்த நோய் தொற்றிலிருந்து மீண்டு வர தொடங்கியது. ஆனால் கடந்த சில மாதங்களாக இந்த வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவை சுக்குநூறாக நொறுக்கி வருகிறது என்றுதான் சொல்லவேண்டும்.இந்த வைரஸ் தொற்று இரண்டாவது அலை காரணமாக இந்தியாவில் மரணங்களும், நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களும், மிக அதிகமாக காணப்படுகிறார்கள்.

அதனால் உலக நாடுகள் மத்தியில் இந்தியா தற்போது ஒரு பரிதாப நிலையை அடைந்திருக்கிறது.இதற்கிடையில் உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவில் இந்த வைரஸ் தொற்று பரவ கருத்தில்கொண்டு இந்திய விமானங்களுக்கு தடை விதித்து இருக்கிறது.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசி இருக்கின்றார். அந்த சமயத்தில் ஆக்சிசன் தயாரிப்பு மற்றும் தடுப்பூசி தயாரிப்பதற்கான மூலப் பொருட்களின் குறைபாட்டை சரிசெய்ய இந்தியாவிற்கு உதவிபுரிய அமெரிக்கா தயாராக இருப்பதாக ஜோ பைடன் உறுதியளித்திருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடியிடம் அவர் பேசியது சரியான நேரத்தில் நடைபெற்ற சரியான முக்கியத்துவம் வாய்ந்த உரையாடலாக உலக நாடுகள் மத்தியில் கருதப்படுகிறது.

தற்போது இந்த வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக, இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் நோயாளிகள் நிரம்பி வழிவது உயிர்காக்கும் ஆக்சிசன் குறைபாடும் இருந்துவருகிறது. இதனால் வடமாநிலங்களில் போதிய மருத்துவ கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தாலும் ஆக்சிசன் தட்டுப்பாடும் போதிய வசதி எதுவும் இல்லாமல் நோயாளிகள் மருத்துவமனையில் வாசலிலேயே தங்களுடைய உயிரை இழக்கும் ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது.

அதிலும் குறிப்பாக ஆக்சிசன் மற்றும் தடுப்பூசிகளை தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் இல்லாததால் இந்தியா மிகப் பெரிய சிரமத்திற்கு ஆளாகி இருக்கிறது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திரமோடியிடம் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியாவில் நிலவும் சூழ்நிலை, தடுப்பூசி கட்டுப்பாடு உள்ளிட்டவைகள் தொடர்பாக ஆலோசனை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது இன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் நான் உரையாடினேன் .அது நமக்கு பலன் அளிக்கும் விதமாக அமைந்தது. இரண்டு நாட்டிலும் உள்ள இந்த நோய் தொற்று குறித்து விரிவாக ஆலோசனை செய்தோம் என்று தெரிவித்திருக்கிறார்.

அதோடு இந்தியாவில் ஆக்சிசன் உற்பத்தி மற்றும் தடுப்பூசி தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கின்றது. இந்த நிலையில், உதவி புரிய முன் வந்திருக்கின்ற அமெரிக்காவிற்கு நன்றி தெரிவித்தேன் என கூறியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

இந்தியாவில் ஆக்சிசன் மற்றும் தடுப்பூசி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்கா உறுதியாக தெரிவித்திருக்கிறது. அதேபோல பல மருத்துவ உபகரணங்களை அனுப்பி வைக்க அமெரிக்கா முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அவசர தேவையின் அடிப்படையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் கருவிகளை ஏற்பாடு செய்யவும் அதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து பார்த்து வருவதாகவும் அமெரிக்க அதிபர் தெரிவித்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஆகவே இந்தியாவில் உற்பத்தி செய்யும் கோவி ஷீல்டு தடுப்பூசி தயார் செய்யும் மூலப்பொருட்கள் அமெரிக்காவில் தான் கிடைக்கிறது.

ஆகவே உள்நாட்டு தேவையை கருத்தில் கொண்டு வெளிநாடுகளுக்கு அந்த மூலப்பொருட்களை அனுப்பி வைக்க அமெரிக்க அரசு தடை விதித்திருந்தது. இதனால் இந்தியாவிற்கு நெருக்கடி உண்டானது இந்த நிலையில், இந்தியாவில் அவசர நிலை இருப்பதை கருத்தில் கொண்டு இந்தியாவிற்கு அதனை வழங்குவதற்கு முன் வந்திருக்கிறது அமெரிக்க அரசு. இதுதொடர்பாக ஜோ பைடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் விரிவாக உரையாடி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நெருக்கடி சமயத்தில் இரு நாட்டு தலைவர்களுடைய பேச்சுவார்த்தை சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இப்பொழுது இந்தியா என்ன நிலையில் இருக்கிறதோ அதே நிலையில்தான் இந்த தொற்றின் முதல் அலையின் போது அமெரிக்கா இருந்து வந்தது. அப்போது இந்தியா அமெரிக்காவிற்கு உதவும் பொருட்டு ஹைட்ரோ குளோரோகுயின் மாத்திரைகளை டன் கணக்கில் அந்த நாட்டிற்கு ஏற்றுமதி செய்து தன்னுடைய தாராள மனதை காட்டியது. இதனை கருத்தில் கொண்டுதான் அமெரிக்க அரசு இப்போது இந்தியாவிற்கு கை கொடுக்க முன்வந்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Previous articleதேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு போட்ட அதிரடி உத்தரவு! அதிர்ச்சியில் தமிழகம்!
Next articleசுகாதாரத்துறை செயலாளர் வெளியிட்ட குட் நியூஸ்! குஷியில் தமிழக மக்கள்!