சுகாதாரத்துறை செயலாளர் வெளியிட்ட குட் நியூஸ்! குஷியில் தமிழக மக்கள்!

0
82

கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவில் மிகப்பெரிய அளவில் பரவி வருகிறது. இதனால் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதுமே வெகுவாக பாதிப்படைந்து இருக்கிறது.

இந்த நோய் தோற்ற உலகில் பரவ தொடங்கிய காலகட்டத்தில் சீனா தான் இதன் பாதிப்பில் முதலிடத்தில் இருந்து வந்தது. அதன் பிறகு படிப்படியாக மற்ற நாடுகளுக்கு இந்த நோய் தொற்று பரவத்தொடங்கியது. தொடர்ந்து இந்த நோய் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் இருந்தது. இதனைத் தொடர்ந்து படிப்படியாக அமெரிக்காவில் இந்த நோய்த் தொற்று பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. இதற்கு இடையில் முதலில் இந்த நோய்த்தொற்றை சந்தித்த சீனா தற்போது கடைசி நிலையில் கூட இல்லை என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் அங்கே முழுவதுமாக இந்த நோய் தொற்று கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக தெரிகிறது.

அதன் காரணமாகவே இந்த நோய்த்தொற்று பட்டியலில் இருந்து அந்த நாடு விடுபட்டு விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், உலகில் மிக முக்கிய நாடுகளாக கருதப்படும் அமெரிக்கா ,இந்தியா போன்ற முக்கிய நாடுகள் அனைத்தும் இந்த நோய்த் தொற்றின் பாதிப்பில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கின்றனர்.

இதற்கிடையில் தமிழ்நாட்டில் தற்போது விதிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு மற்றும் புதிய கட்டுப்பாடுகள் காரணமாக, இந்த நோய் தொற்று வெகுவாக குறைந்து இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார். சென்னை தண்டையார்பேட்டையில் இருக்கின்ற அரசு மருத்துவமனையில் இருக்கும் தொற்று நோய் பரிசோதனை மையத்தை ஆய்வு செய்த பின்னர் பத்திரிக்கைக்கு பேட்டியளித்த அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். அதாவது முழு ஊரடங்கு மற்றும் புதிய கட்டுப்பாடுகள் காரணமாக, இந்த நோய் தொற்று குறைந்திருக்கிறது. அடுத்த சில தினங்களுக்கு தேவையில்லாமல் மக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்.

இதற்கிடையில் நோய் கட்டுப்பாட்டு பகுதியில் இருப்பவர்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.தமிழ்நாட்டில் 12 ஆயிரம் ஆக்சிசன் படுக்கைகள் அமைக்கப்படும் எனவும், இதில் 2,000 படுக்கைகள் இந்த வாரம் முதல் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார். தமிழ்நாட்டிற்கு 52000 டோஸ் ரிம்டிசிவர் மருந்து வழங்கப்பட்டிருப்பதாகவும், தேவையானவர்களுக்கு மட்டுமே இந்த மருந்து வழங்கப்பட வேண்டும் என்றும், படிப்படியாக மற்ற மாவட்டங்களிலும் இதனை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

ஒரு வீட்டில் இருக்கும் எட்டு நபர்களுக்கு இந்த தொற்று நோய் உறுதியாகி இருப்பதால் வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டிருக்கும் இந்த நோயாளிகள் தொடர்ச்சியாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும், தெரிவித்திருக்கிறார். இந்த பாதிப்பில் சித்த மருத்துவம் நமக்கு கைகொடுத்து இருக்கிறது என்றும், மீண்டும் முழு வீச்சில் சித்த மருத்துவ சிகிச்சை ஆரம்பிக்கப்படும் என்றும் இராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.

ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் ஆரம்பிப்பதற்கு குழு அமைக்கப்பட்டு இருப்பதாகவும், மே மாதம் இரண்டாம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கையை நடைபெறுவதால் அன்று பின்பற்றப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவிப்பை வெளியிடுவார் என்று தெரிவித்திருக்கிறார் ராதாகிருஷ்ணன்.