தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில, அரசுகள் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி பல்வேறு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.ஆனால் மத்திய மாநில அரசுகள் போட்ட தடை உத்தரவுகள் எதையும் பொதுமக்கள் சரிவரப் பின்பற்றவில்லை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக கவசம் அணிவதையும், தனிமனித இடைவெளியுடன் நடந்து கொள்வதையும், பொதுமக்கள் பெரிதாக இல்லாமல் இருப்பதால் இந்த நோய்த்தொற்று மேலும் மேலும் பரவிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் நேற்றைய தினம் 15,890 பேருக்கு இந்த நோய் தொற்றுவது உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று ஒரே நாளில் 77 பேர் இந்த நோயினால் உயிரிழந்திருக்கிறார்கள்.
மொத்தமாக பலியானோரின் எண்ணிக்கை 14 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. சென்னையை பொருத்தவரையில் நான்காயிரத்து 640 பேருக்கு இந்த நோய் தொற்று உறுதியாகியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து சென்னையில் இந்த நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்து 18 ஆயிரத்து 614 ஆக உயர்ந்திருக்கிறது.
இந்த நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 20ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் விதிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து கடந்த 26ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரையில் பெரிய கடைகள் மற்றும் ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள் உள்ளிட்டவைகளுக்கு அனுமதி இல்லை என்று தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்த சூழ்நிலையில், பெரிய கடைகளை கணக்கெடுப்பு அவைகள் செயல்படுவதை தடுப்பதில் மாவட்ட நிர்வாகத்தினருக்கு குழப்பம் எழுந்ததைத் தொடர்ந்து குறிப்பிட்ட சில மாவட்ட ஆட்சியர்கள் எத்தனை சதுரடி இருந்தால் அதனை பெரிய கடையாக கருதலாம் என்று தமிழக அரசிடம் விளக்கம் கேட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், நேற்றைய தினம் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மாவட்ட ஆட்சியர்களுக்கு ஒரு உத்தரவை பிறப்பித்து இருக்கிறார். அந்த உத்தரவில் 3000 சதுர அடிக்கு மேல் இருக்கின்ற பெரிய கடைகளை மூட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு சென்னை மாநகராட்சி உள்பட எல்லா மாவட்டங்களுக்கும் பொருந்தும் கொரொனாவை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபகாலமாக தமிழகத்தில் இந்த நோய்த்தொற்று பரவல் மிக அதிகமாக பரவி வருவதால் விரைவில் முழு ஊரடங்கு போடலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. அதனால் அந்த முழு ஊரடங்கு நோக்கித்தான் மாநில அரசு நகர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதற்காகவே ஊரடங்கு நோக்கி செல்வதற்கு முன்பு படிப்படியாக கட்டுப்பாடுகளை தெரிவித்து வருகிறது தமிழக அரசு என்று தெரிவிக்கப்படுகிறது. ஒருவேளை பொதுமக்கள் மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் கட்டுப்பாடுகளை விதித்து முழுமையாக கட்டுப்பாடுகளை கடைபிடித்தால் முழு ஊரடங்கை தவிர்க்கலாம் என்று சொல்கிறார்கள்.