ஸ்டாலின் கேட்ட கேள்வியும்! துரைமுருகன் சொன்ன பதிலும்!

0
99

தமிழகத்தில் கடந்த 6ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கிறது.அதன் வாக்கு எண்ணிக்கை மே மாதம் இரண்டாம் தேதி அதாவது எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் அதற்கு இன்னும் ஒருசில தினங்களில் இருந்துவருகின்றன.

அதனால் தமிழக அரசியல் களம் சூடு பிடித்து இருக்கிறது. ஆனால் எதிர்கால ஆட்சி அமைப்பின் எந்த ஒரு நடவடிக்கையும் பெரிதாக ஈடுபடாமல் இருக்கிறது தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் அதிமுக அதற்கு என்ன காரணம் என்று சொன்னால் ஒருவேளை அதிமுக வெற்றி பெற்றால் இப்போது இருக்கும் அமைச்சரவை பட்டியல் அப்படியே தொடரும் என்ற கருத்து நிலவி வருகிறது என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் ,திமுகவின் பற்பல தலங்களில் அமைச்சரவை தொடர்பான விபரங்கள் சூடுபிடிக்க தொடங்கி இருக்கின்றன. கொடைக்கானலில் குடும்பத்துடன் ஓய்வு எடுத்து வந்த எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அடுத்தது அமைச்சரவையில் யார் யார் இடம் பெறுவார்கள் என்பது தொடர்பான தன்னுடைய ஆலோசனையை தன் மருமகன் சபரீசன் உடன் பேசி முடிவெடுத்து தன்னுடைய கைப்படவே வெள்ளைத்தாளில் எழுதி வைத்திருப்பதாக திமுக வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வைத்திருக்கும் அந்த வெள்ளைத் தாளில் தங்களுடைய பெயர் இடம் பெற்றிருக்கிறதா என்பதை அறிதற்காகவும், அப்படி இடம் பெறவில்லை என்றால் கடைசி நேர மாற்றங்களில் தங்களுடைய பெயர் இடம்பெற வைப்பதற்கான முயற்சிகளையும், அந்த கட்சியின் பெருந்தலைகள் செய்துவருவதாக செய்திகள் கசிகின்றன.

கொடைக்கானலில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின் திமுகவின் பொதுச் செயலாளராக இருந்து வரும் துரைமுருகன் உடன் உரையாடி இருக்கிறார். அவர்களுடன் உரையாடியது அடுத்த ஆட்சியை நம்முடைய தான் ஆகவே கேபினட் பட்டியலை தயார் செய்ய வேண்டும் உங்களுடைய கருத்துக்களை தெரிவியுங்கள் என்று கேட்டிருக்கிறார் ஸ்டாலின்.

ஆனாலும் தேர்தலுக்கு முன்னர் வேட்பாளர் பட்டியலை தயார் செய்தபோதே தன்னை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று வருத்தத்தில் இருந்து வந்தார் துரைமுருகன். அதனை மனதில் வைத்துக் கொண்டு இதற்கு ஒரு பதிலை தெரிவித்திருக்கிறார் துரைமுருகன். அதனால் ஸ்டாலின் வருத்தம் அடைந்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதாவது வேட்பாளர் பட்டியலில் தாங்கள் தான் மிகச் சிறப்பாக தயார் செய்திர்களே அதே போல இதையும் நீங்களே தயார் செய்து விடுங்களேன் என்று பட்டும் படாமலும் பேசியிருக்கிறார் துரைமுருகன்.

இதுதொடர்பாக திமுகவின் ஒரு சில முக்கிய புள்ளிகளிடம் விசாரணை செய்தபோது, திமுகவில் தலைவர் பதவிக்கு சமமான அதிகாரம் கொண்ட ஒரு பதவிதான் பொதுச்செயலாளர் பதவி ஆனால் இப்பொழுது அப்படி கிடையாது. பொதுச் செயலாளர் பதவியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. வேட்பாளர் பட்டியல் தயார் செய்தபோது பொதுச்செயலாளர் என்ற முறையில் தன்னுடன் ஆலோசிக்கவில்லை என்று துரைமுருகன் வருத்தத்தில் இருந்தது உண்மைதான் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் வேட்பாளர் பட்டியல் தொடர்பாக விவரத்தைத் தெரிந்துகொள்ள துரைமுருகன் முயற்சி செய்து சமயத்திலும் கூட அவருக்கு நெருக்கமான முரசொலி செல்வம் மூலமாகவே ஸ்டாலின் ஒரு சில விஷயங்களை அனுப்பி இருக்கின்றா.ர் அதாவது உங்களுடைய வட்டாரத்தில் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம் என தலைவர் தெரிவிக்கச் சொன்னார் என்று அந்த நபர் தெரிவித்து விட்டு சென்றிருக்கிறார். யாருடைய சிபாரிசும் இல்லாமல் அவரே தன்னிச்சையாக வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கிறார் என்று துரைமுருகனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என தெரிகிறது.

இதன் காரணமாக துரைமுருகன் உடைந்தே போய் விட்டார் என்றுதான் தெரிவிக்கப்படுகிறது. கருணாநிதி உயிருடன் இருந்த காலத்தில் துரைமுருகனிடம் எப்போதும் அன்புடனும், பாசத்துடனும், பழகுவார் அவருடைய ஆட்சிக்காலத்தில் கடைசி நிமிடத்தில் கூட துரைமுருகன் கேட்கும் சில மாற்றங்களை வேட்பாளர் பட்டியலிலும் அமைச்சரவை பட்டியலிலும், செய்வார் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இப்போது திமுகவின் பொதுச்செயலாளர் என்ற அதிகாரத்தில் இருந்தாலும்கூட திமுக தலைமையிலிருந்து ஒரு சிறிய இடைவெளியுடன் துரைமுருகன் நகர்த்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன் காரணமாக தான் அமைச்சரவை பட்டியல் தொடர்பாக ஒரு சம்பிரதாயமாக ஸ்டாலின் தன்னிடம் விசாரணை செய்த சமயத்திலும் கூட வேட்பாளர்பட்டியல் போலவே இதையும் நீங்களே தயார் செய்து விடுங்கள் என்று தன்னுடைய பதிலை தெரிவித்திருக்கிறார் துரைமுருகன். தனக்கு பொதுப்பணித்துறை இல்லை சட்டத்துறை மட்டும்தான் என்று தெரிவிக்கப்பட்டதால் துரைமுருகன் ஏற்கனவே மன உளைச்சலில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் அவரை சமாதானப்படுத்தும் முயற்சியாகவே ஸ்டாலின் இது தொடர்பாக அவரிடம் உரையாட விரும்பி இருக்கலாம். ஆனால் வேட்பாளர் பட்டியலில் தான் புறக்கணிக்கப்பட்டது குறித்து அவருக்கு நினைவு படுத்துவதற்காக தான் துரைமுருகன் இப்போது இவ்வாறு ஒரு பதிலை தெரிவித்து இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.