தேர்தல் ஆணையம் வெளியிட்ட புதிய உத்தரவு! தேர்தல் முடிவில் மாற்றமா?
தமிழகத்தோடு சேர்த்து மொத்தம் 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட்டது.இந்த சட்டமன்ற தேர்தலாலும்,வழிமுறைகளை பின்பற்றாமல் நடத்தப்பட்ட பிரச்சாரத்தினாலும் அதிக அளவு கொரோனா தொற்றானது பரவியது.அந்தவகையில் உயர்நீதிமன்றமும் தேர்தல் ஆணையத்தின் மீது கொலைக்குற்றவியல் வழக்கையே போடலாம் என கூறியிருந்தனர்.தக்க வழிமுறைகளை பின்பற்றாதால் தான் கொரோனாவனது அதிகரித்தது என ஆவேசத்துடன் உயர்நீதிமன்றம் கூறி வருகிறது.
தற்போது வாக்கு எண்ணும் மையங்களிலும் தகுந்த நடவடிக்கைகளை கடைபிடிக்காவிட்டால் வாக்கு எண்ணும் நாளை தள்ளிக்கூட வைக்கக் கூடும் என உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.அதனால் தேர்தல் ஆணையம் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.அவர்கள் அதில் கூறியிருப்பது,வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் 48 மணி நேரத்திற்கு முன்னதாகவே கொரோனா பரிசோதனை எடுத்திருக்க வேண்டும்.அந்த சான்றிதழை சமர்பித்தால் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர் என தெரிவித்துள்ளனர்.அதுமட்டுமின்றி வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே கூட்டங்கள் கூடக் கூடாது எனவும் கூறியுள்ளனர்.
அத்தோடு வெற்றிபெற்ற கட்சிகள் ஆரவாரத்துடன் கூடிய கொண்டாட்டங்களுக்கு தடை வித்தித்துள்ளது.வாக்கு எண்ணும் மையங்களில் அனைவரும் சமூக இடைவெளி,முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என கூறியுள்ளனர்.வாக்கு எண்ணும் மையத்தை கிருமிநாசினிக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.