கொரோனா ஸ்பிரட்டர் மோடி தான்! கொந்தளிக்கும் மருத்துவர்கள்!

0
251
Corona Splinter is Modi! Turbulent Doctors!
Corona Splinter is Modi! Turbulent Doctors!

கொரோனா ஸ்பிரட்டர் மோடி தான்! கொந்தளிக்கும் மருத்துவர்கள்!

கொரோனா தொற்றானது சென்ற ஆண்டை விட தற்போது 2வது அலை உருவாகி மக்களை அதிக அளவு பாதித்து வருகிறது.கொரோனா தடுப்பூசி கண்டிபிடிக்கப்பட்டு போட்டு வந்தாலும் போட்டவர்களுக்கே மீண்டும் கொரோனா வரும் அவலம் ஏற்பட்டுள்ளது.பல கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கடைப்பிடித்து வந்தும் இத்தொற்று பரவுவதை குறைக்க முடியவில்லை.அதிக அளவு தொற்றானது இப்போது நடத்தப்பட்ட பிரச்சாரத்தினாலும்,மக்கள் கூடுவதினாலும் தான் அதிக அளவு கொரோனா தொற்றானது பரவியதிற்கு காரணம்.

இந்திய மருத்துவ சங்கத்தின் துணைத்தலைவர் நவ்தாஜ் சாஹியா மோடி மீது குற்றம் சாட்டியுள்ளார்.அதில் அவர் கூறியிருப்பது,மருத்துவர்கள் கொரோனா பற்றிய கட்டுப்பாடுகளையும்,அதன் விளைவுகளையும் கூறிக்கொண்டிருக்கும் நிலையில்,அதனையெல்லாம் மீறும் விதமாக மக்கள் முன் கூட்டம் கூடி பிரச்சாரம் நடத்துவது,தற்போது நடத்தப்பட்ட கும்பமேளா ஆகியவற்றில் ஏராளமானோர் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமலேயே கலந்துக் கொள்கின்றனர்.அதுமட்டுமின்றி பல இடங்களில் அதிக அளவு மக்களின் கூட்டங்களை காண முடிகிறது.

அதுமட்டுமின்றி மக்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொத்து கொத்தாக பலியாகியும் வருகின்றனர்.பல மாநிலங்களிலுள்ள மாவட்டங்களில் கொரோனாவால் உயிரிழப்பதையே குறிப்பிடாமல் மூச்சு திணறல்,நெஞ்சுவலி என குறிப்பிட்டு விடுகின்றனர்.இதனால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படுவது போல தெரிகிறது.ஆனால் டெல்லியில் சடலங்களை எரிக்கவே இடங்கள் இல்லாமல் மக்கள் தவிக்கின்றனர்.

மக்கள் பாதுகாப்புடன் இருக்கவும்,முன்னெச்சரிக்கையுடன் இருக்கவும் மருத்துவர்கள் எச்சரித்து வரும் நிலையில் அரசாங்கமே அனைத்து கூட்டங்களுக்கும் அனுமதி தந்து கொரோனா தொற்றை பரப்பி வருகிறது.அதிலும் முக்கிய பங்கு மோடிக்கு உள்ளது.இவர் சூப்பர் ஸ்பிரட்டராகவும் வேலை பார்த்து வருகிறார் என கூறியுள்ளார்.

Previous articleதேர்தல் ஆணையம் வெளியிட்ட புதிய உத்தரவு! தேர்தல் முடிவில் மாற்றமா?
Next article18+ களுக்கு தொடங்கிய தடுப்பூசி திருவிழா! அதிகரிக்கும் முன்பதிவு!  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here