போடப்படும் முழு ஊரடங்கு! மோடியின் திடீர் ஆலோசனைக்கூட்டம்!
சென்ற ஆண்டை விட தற்போது தற்போது கொரோனாவின் 2-வது அலை உருவாகி வருகிறது.இந்த இரண்டாவது அலையானது சுனாமி போல அதி வேகத்தில் பரவி வருகிறது.தினசரி தொற்று பாதிப்பு 3 லட்சத்தை தாண்டி உறுதியாகி வருகிறது.அதே போல தினசரி பலி எண்ணிக்கையும் 3,500 தாண்டி வருகிறது.மருத்துவமனைகளில் படுக்கைகள் இன்றியும் ஆக்சிஜன் இன்றியும் கொரோனா நோயாளிகள் தவித்து வருகின்றனர்.அதிக அளவு கொரோனா தொற்று உறுதியாகி வருவதால் அதை சாமாளிக்கவும் மத்திய மற்றும் மாநில அரசுகள் திணறி வருகிறது.
பிரதமர் நரேந்திரமோடி கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முதலில் மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசானைக்கூட்டம் மேற்கொண்டார்.அந்த ஆலோசனைக்கூட்டத்தில் மாநிலங்களில் கொரோனா தொற்று பரவுளுக்கு ஏற்ப தட்டுப்பாடுகள் கூடிய ஊரடங்கை சில மாநிலங்களில் அமல்படுத்தினர்.அதனையடுத்து பல ஆலோசனைக்கூட்டங்களை மாநில முதலமைச்சர்களுடன் காணொளி காட்சி மூலம் நடத்தினார்.நேற்று இராணுவ தளபதி நரவேனயுடன் ஆலோசனைக்கூட்டம் நடத்தினர்.கொரோனா தொற்றை கட்டுப்படுத்த இராணுவத்தின் பங்கு எவ்விதத்தில் செயல்படுத்துவது என ஆலோசனையை மேற்கொண்டார்.
அதனையடுத்து மத்திய அமைச்சர்களுடன் இன்று ஆலோசனைக்கூட்டத்தை நடத்த உள்ளார்.இந்த ஆலோசனைகூட்டத்தின் முடிவில் சிறிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு போட வாய்புகள் உள்ளதாக கூறுகின்றனர்.அதுமட்டுமின்றி கொரோனா பரவல் தடுப்புக் குறித்தும் முடிவுகள் எடுக்கப்படும் என கூறுகின்றனர்.கொரோனா பரவல் குறித்து மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடத்துவது இதுவே முதல் முறையாகும்.தற்போது கொரோனா தடுப்பூசி ரெம்டெசிவெர் மிகுந்த தட்டுப்பாடாக உள்ளது.அத்தட்டுப்பாட்டை குறைக்கவும் முடிவுகள் எடுக்கப்படும் என சுற்று வட்டாரங்கள் கூறுகிறது.