தமிழக மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த சுகாதாரத்துறை செயலாளர்!

0
86

நோய்த் தொற்று மிக வேகமாகப் பரவி வருவதன் காரணமாக, அடுத்த 10 தினங்களுக்கு மக்கள் மிகவும் கவனமாகவும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் நேற்று மட்டும் 17 ஆயிரத்து 797 பேர் இந்த தட்டினால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 11 லட்சத்து 48 ஆயிரத்து 64 ஆக உயர்ந்திருக்கிறது. இதில் 10 ஆயிரத்து 866 பேர் ஆண்கள் அதேபோல 2031 பெண்களும் இதனால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மருத்துவமனைகளில் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 556 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தனியார் மருத்துவமனைகளில் 46 பேர் அதேபோல அரசு மருத்துவமனையில் 61 பேர் இன்று நேற்று மட்டும் 107 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 933 ஆக அதிகரித்திருக்கிறது, 15 ஆயிரத்து 542 பேர் இந்த நோய் தொற்றிலிருந்து குணமடைந்து இருக்கிறார்கள். தமிழகத்தில் நாளுக்கு நாள் இந்த தொற்றின் வேகம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்த சூழ்நிலையில், சென்னை எழும்பூர் தாய்சேய் மருத்துவமனையில் இந்த நோய்த்தொற்று சிகிச்சைக்காக புதிதாக அமைக்கப்பட்ட 250 படுக்கைகள் மற்றும் தொற்று இருக்கின்ற கர்ப்பிணி பெண்களுக்கான பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள 60 படுக்கை வசதிகளை சுகாதாரத்துறை செயலாளர் நேற்று மாலை ஆரம்பித்து வைத்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன் போர்க்கால அடிப்படையில் 12852 ஆக்சிஜன் படுக்கைகளை ஏற்படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி கடந்த இரண்டு தினங்களில் 576 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டன. நாளை 3076 படுக்கைகளும் வருகிற 7ஆம் தேதிக்குள் 8525 படுக்கைகளும் தயார்நிலையில் இருக்கும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இரண்டு தினங்களுக்குள் 500 படுக்கைகள் உருவாக்கப்படுகின்றன என்று தெரிவித்திருக்கிறார் ராதாகிருஷ்ணன்.

கடந்த வாரம் 354 மருத்துவர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், மேலும் 900 முதுகலை பட்டம் பெற்றவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.