சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட எடப்பாடி பழனிச்சாமி 92 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதிமுக திமுக என்ற தமிழகத்தின் இருபெரும் கட்சிகளிலும் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி என்ற இருபெரும் ஜாம்பவான்கள் இல்லாமல் அந்த கட்சிகள் எதிர்கொண்ட முதல் சட்டசபை தேர்தல் சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தல். கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற்ற இந்த சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் இருக்கக்கூடிய 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.
இதில் செலுத்தப்பட்ட வாக்குகள் அனைத்தும் மே மாதம் இரண்டாம் தேதி எண்ணப்படும் என்று தேர்தல் ஆணையம் முன்னரே அறிவித்து இருந்தது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி ஏப்ரல் மாதம் இரண்டாம் தேதி நேற்றைய தினம் காலை 8 மணி அளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
இந்த சூழ்நிலையில், தன்னுடைய சொந்த தொகுதியாக இருந்து வரும் சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து முன்னணியில் இருந்து வந்தார். கடைசியில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் சம்பத்குமார் விட 92 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார் எடப்பாடி பழனிச்சாமி. இறுதிச்சுற்று நிலவரப்படி அவர் 93 ஆயிரத்து 802 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 154 வாக்குகளும், சம்பத்குமார் 69 ஆயிரத்து 352 வாக்குகளும் பெற்று இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இப்படியான சூழ்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஏழாவது முறையாக எடப்பாடி சட்டசபை தொகுதியில் எடப்பாடி பழனிச்சாமி போட்டியிட்டு ஐந்தாவது முறையாக வெற்றி பெற்று இருக்கிறார் அதே போல இரண்டு முறை தோல்வியை சந்தித்து இருக்கிறார்.
கடந்த 1989 சட்டசபைத் தேர்தலில் முதல் முறையாக எடப்பாடி சட்டசபை தொகுதியில் ஜெயலலிதா அணியில் சேவல் சின்னத்தில் எடப்பாடி பழனிச்சாமி போட்டிருக்கிறார். இதுவரையில் அவர் ஆறு முறை அந்த தொகுதியில் போட்டியிட்டு நான்கு முறை வெற்றியும், 2 முறை தோல்வியை சந்தித்து இருக்கிறார். கடந்த 1989 ,1991 2011 2016 , ஆகிய சட்டசபை தேர்தல்களில் எடப்பாடி சட்டசபைத் தொகுதியில் எடப்பாடி பழனிச்சாமி வெற்றியும். அதேபோல கடந்த 2006ஆம் ஆண்டு மற்றும் 1996 ஆம் ஆண்டு ஆகிய சட்டசபை தேர்தலில் தோல்வியையும் சந்தித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
அதேபோல கடந்த 2011ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி 42 ஆயிரத்து 22 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்று தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மூன்றாவது முறையாக போடி சட்டசபைத் தொகுதியில் 11 ஆயிரத்து 55 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டசபைத் தொகுதியில் அதிமுக சார்பாக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் திமுக சார்பாக தங்க தமிழ்ச்செல்வன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக முத்துசாமி, மக்கள் நீதி மையம் கட்சியின் சார்பாக கணேஷ்குமார், அதேபோல நாம் தமிழர் கட்சியின் சார்பாக பிரேம் சந்தர் உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.
வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்ததில் இருந்து முதல் சுற்றில் ஒரு பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். அதனைத் தொடர்ந்து ஓ பி எஸ் அவர்களை திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் முந்தினார். இந்த நிலையில் மீண்டும் ஓ பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார் இரவு பத்து மணி அளவில் 19ஆவது சுற்றுக்கள் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்தது அதில் ஓ பன்னீர்செல்வம் 67 ஆயிரத்து 685 வாக்குகள் பெற்றிருந்தார். அதேபோல் அதிமுக வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வன் 59 ஆயிரத்து 761 வாக்குகள் பெற்றிருந்தார் இதனால் ஓ பன்னீர்செல்வம் 7924 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார்.
இந்த சூழ்நிலையில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனைவிட அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் 11 ஆயிரத்து 55 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் சார்பாக அறிவிக்கப்பட்டது.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டசபைத் தொகுதிகள் கடந்த 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் அதிமுக சார்பாக ஓபிஎஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது அனைவரும் அறிந்ததே.