சமீபத்தில் நடைபெற்று முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்க இருக்கிறது. அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி 4 சட்டசபை தொகுதிகளில் வெற்றி அடைந்திருக்கிறது. அந்த கட்சி கடந்த 20 ஆண்டு காலமாக தமிழகத்தில் காலூன்ற முடியாமல் தவித்து வந்தது.
ஆனால் தற்போது நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி கோவை தெற்கு தொகுதி, திருநெல்வேலி, மொடக்குறிச்சி, உள்ளிட்ட நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் கோவை தெற்கு சட்டசபை தொகுதியில் பல வருடகாலமாக களப்பணி ஆற்றி வந்த பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் பாஜக மற்றும் அதிமுக கூட்டணியின் சார்பாக கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார்.
அதேநேரம் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் நடிகர் கமலஹாசனும் இதே தொகுதியில் போட்டியிட்டார். இது மிகப்பெரிய எதிர்பார்ப்பை தமிழகம் முழுவதிலும் உண்டாக்கியது. வாக்கு எண்ணிக்கை நடைபெற்று கொண்டிருந்த சமயத்தில் கூட கமலஹாசன் இறுதிவரையில் முன்னிலையில் இருந்து வந்தார்.
ஆனால் திடீரென்று வானதி ஸ்ரீனிவாசன் வெற்றி பெற்று விட்டதாக அறிவிக்கப்பட்டது.இந்த சூழ்நிலையில், கமல்ஹாசன் புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட நடிகை சுருதிஹாசன் என்னுடைய தந்தையை நினைத்து நான் எப்பொழுதும் பெருமை கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த பதிவானது தற்சமயம் இணையதளத்தில் வைரலாக பரவி வருவதாக சொல்லப்படுகிறது.