சட்டசபை குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டாலின் சந்திக்கப்போகும் மிக முக்கிய நபர்!

0
144

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருக்கிறது. திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்று இருக்கின்ற சூழ்நிலையில், பத்து வருடங்களுக்கு பின்னர் மறுபடியும் திமுக ஆட்சியில் அமர இருக்கிறது. அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் வருகிற 7ஆம் தேதி முதலமைச்சராக பொறுப்பேற்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் நேற்று மாலை 6 மணி அளவில் அண்ணா அறிவாலயத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் 125 திமுக சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் திமுகவின் கூட்டணி கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட எட்டு சட்டசபை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற அந்த கூட்டத்தில் திமுகவின் சட்டசபை உறுப்பினர்கள் ஸ்டாலின் தேர்வு மற்றும் முதலமைச்சர் வேட்பாளர் ஆதரவு உள்ளிட்டவை இதற்கான ஆலோசனை மற்றும் இறுதி கட்ட முடிவுகள் போன்றவற்றை எடுப்பார்கள் என்று முன்னரே தெரிவிக்கப்பட்டது.

ஆகவே நேற்று நடைபெற்ற கூட்டத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்டாலின் சட்டசபை குழு தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து திமுகவைச் சார்ந்த சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தங்களுடைய மகிழ்ச்சியை தெரிவித்து இருக்கிறார்கள். அதோடு சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டு இருக்கின்ற ஸ்டாலின் இன்று காலை 10 மணி அளவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஐ சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

அந்த சமயத்தில் தமிழக அமைச்சரவையின் பட்டியலையும் ஆளுநரிடம் கொடுக்க இருக்கின்றார் ஸ்டாலின் ஆகவே ஆட்சி அமைக்க உரிமை கூறிய பின்னர் ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்ததும் வரும் 7ஆம் தேதி முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்க இருக்கிறார். நோய்த் தொற்று பரவ காரணமாக மிக எளிமையான முறையில் இந்த பதவியேற்பு விழா நடைபெற இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது.