உச்சத்தை தொட்ட கொரோனா! பலி எண்ணிக்கை 32 லட்சத்தை எட்டியது!
கொரோனா தொற்றானது சென்ற ஆண்டு சீனாவிலுள்ள வுஹான் பகுதியில் ஆரம்பித்தது.இத்தொற்று படிப்படியாக ஐரோப்பியா,அமெரிக்க,ரஷ்யா என உலக நாடுகள் அனைத்திலும் பரவியது.அதனையடுத்து அத்தொற்று இந்தியாவிற்கும் பரவியது.இருப்பினும் உலக நாடுகள் மத்தியில் கொரோனா தொற்றின் பாதிப்பில் இந்தியா நான்காம் இடத்தில் இருந்தது.ஆனால் தற்போது இந்தியா 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.அதனால் இந்தியாவில் பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளனர்.முதலில் இத்தொற்று அதிக அளவு காணப்பட்டதால் இந்தியா முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்தினர்.
அதனையடுத்து கொரோனா தொற்று சிறிது குறைந்து காணப்பட்டது.மக்கள் பல கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுடன் வெளியே செல்ல அனுமதி அளித்தனர்.மக்கள் நாளுக்கு நாள் கொரோனா தொடரின் விதிமுறைகளை கடைபிடிகா காரணத்தினால் மீண்டும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தற்போது வேகமாக பரவி வருகிறது.மீண்டும் இந்தியாவில் தொற்று அதிகமுள்ள மாநிலங்களில் முழு ஊரடங்கையும்,தொற்று குறைவாக உள்ள மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கையும் அமல்படுத்தியுள்ளனர்.
அந்தவகையில் தற்போது டெல்லியில் அதிக அளவு கொரோனா தொற்று பரவியுள்ளது.டெல்லியில் கொரோனா தொற்றால் பலியானவர்களின் உடலை தகனம் செய்ய இடமில்லாமல்,பூங்காக்கள் போன்றவற்றை உபயோகித்து வருகின்றனர்.அதனால் டெல்லி தற்போது இடுகாடுகளாக காட்சியளிக்கிறது.அதுமட்டுமின்றி இந்தியாவில் ஆக்சிஜன் தேவை அதிக தட்டுப்பாடாக உள்ளது.தற்போது ஜெர்மனியிலிருந்து கூட ஆக்சிஜன் இந்தியாவிற்கு வந்தடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதனையடுத்து 15 கோடிக்கும் மேற்பட்டோர் இந்த கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளனர்.32 லட்சத்துக்கு அதிகமானோர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.உலகளவில் பார்க்கும் போது இந்த கொரோனா தொற்றால் 15.49 கோடி பேர் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.13.24 கோடி பேர் இத்தொற்றால் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இத்தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32.40 லட்சமாக உள்ளது.
இந்தியாவில் மட்டும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தற்போது 2.06 கோடியை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.அதனையொட்டி தமிழகத்திலும் பல கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளனர்.நாளை முதல் பகுதி நேரம் மட்டுமே கடைகள் அனைத்தும் இயங்கும்.உணவகங்கள் அனத்திலும் உட்கார்ந்து சாப்பிட தடை விதித்து பார்சல் சேவையை பயன்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளனர்.இவை அனைத்து நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது.