உங்களுக்கு தலை முடி உதிரும் பிரச்சனை உள்ளதா!! அப்ப கண்டிப்பா இத பாருங்க!!
கறிவேப்பிலை இலையை அரைத்துத் தேங்காய் எண்ணெய்யில் கலந்து காய்ச்சி தலை முடியில் தேய்த்தால் தலை முடி நன்கு கருமையாக வளரும்.
இறைச்சி, முட்டை, மீன், போன்றவற்றினை சாப்பிடுவதன் மூலம் முடி நன்கு வளர்வதை காணலாம்.
நாம் அன்றாட வாழ்வில் உணவும் உணவுகளில் தினமும் பீட்ரூட் சாறு சேர்த்து கொள்வதான் மூலம் தலை முடி உதிர்வதிலிருந்து குறைத்துக் கொள்ளலாம்.
கேரட் மற்றும் எலுமிச்சைசாறு இரண்டையும் சேர்த்து தேங்காய் எண்ணெயில் கலந்து மிதமான சூட்டில் காய்ச்சி முடிகளில் தேய்த்தால் இளநரை நீங்கும்.
வெங்காயத்தை எடுத்து தலை முடி உதிர்ந்த இடத்தில் தடவி வர முடி வேகமாக வளர தொடங்கும்.
ப்ரோட்டீன் நிறைந்த உணவு பொருட்களை உண்பதன் மூலம் முடி அடார்த்தியாக வளரும்.
வைட்டமின் சி அதிகமாக உள்ள நெல்லிக்காய் சாறு மற்றும் எலுமிச்சைசாறு கலந்து தலையில் நன்றாக தேய்த்து குளித்து வர தலை முடி கருமையாக வளரும்.
மருதாணி இலையை அரைத்து அதனுடன் ஒரு முட்டை மற்றும் அதனுடன் விளக்கெண்ணெய்யை சேர்த்து கலந்து தலை முடியில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் நரைமுடி கருமையாக மாறும்.
வசம்பை நன்கு அரைத்து அதனுடன் தேங்காய் எண்ணையை கலந்து தலைக்கு தடவி வந்தால் ஈரமான பொடுகு நீங்கும்.