கைது செய்யப்பட்ட வானதி ஸ்ரீனிவாசன்! வலைதள பக்கத்தில் எழுப்பிய அதிரடி கேள்வி!

0
128

சமீபத்தில் நடைபெற்ற தமிழகம், புதுவை, கேரளா, அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த 2ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்ந்திருக்கிறது.அதேபோல கேரள மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியும் அசாம் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியும் ஆட்சியை பிடித்திருக்கிறது. அதேபோல யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்து இருக்கிறது மற்றும் மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மம்தா பானர்ஜி பிடித்திருக்கிறார்.

இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பாக மேற்கு வங்க மாநிலம் நந்திகிராம் சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்ட அந்த கட்சியின் தலைவரும் தற்போதைய முதலமைச்சர் மம்தா பானர்ஜி பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியை தழுவினார். இதன் காரணமாக, ஆத்திரம் கொண்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வன்முறையில் பலர் உயிரிழந்திருக்கிறார்கள்.

இவ்வாறான சூழ்நிலையில், மேற்குவங்காளத்தில் நடந்த வன்முறையினகாரணமாக, ஏற்பட்ட பாதிப்புகளை தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சட்ட சபை உறுப்பினரான வானதி சீனிவாசன் பார்வையிட்டார். அதோடு தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து போராட்டத்தில் அவர் ஈடுபட்டு இருக்கிறார். இதன் காரணமாக, அந்த மாநில காவல்துறையினர் வானதி சீனிவாசன் கைது செய்திருக்கிறார்கள்.

இதுதொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் சட்ட சபை உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் தன்னுடைய வலைதள பக்கத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், ஒரு அமைதிப் போராட்டத்திற்கு கூட மேற்கு வங்கத்தில் அனுமதி கிடையாது. சட்டசபை உறுப்பினராக இருக்கக் கூடிய தனக்கு இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களின் நிலை எவ்வாறு இருக்கும் என்று கேள்வி எழுப்பி பதிவிட்டிருக்கிறார்.

Previous articleபோடப்படுகிறதா முழு ஊரடங்கு? அதிகாரிகளுடன் ஸ்டாலின் அவசர ஆலோசனை!
Next articleபதவியேற்றவுடன் தனது அதிரடி காட்டிய தமிழக அரசு! இரவோடு இரவாக செய்யப்பட்ட மூன்று முக்கிய மாற்றங்கள்!