எம். எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த அதிமுகவின் முக்கிய புள்ளி!

Photo of author

By Sakthi

சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றியடைந்து ஆட்சியைப் பிடித்திருக்கிறது அந்த கட்சி தனித்து 125 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது அதோடு கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து மொத்தமாக 159 இடங்களில் வெற்றி பெற்று மாபெரும் பலத்துடன் ஆட்சியைப் பிடித்திருக்கிறது.அந்த விதத்தில் அதிமுகவோ தனித்து 66 இடங்களை கைப்பற்றி இருக்கிறது கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து 76 இடங்களில் வெற்றி அடைந்திருக்கிறது.

இதில் அதிமுகவில் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற பேச்சுக்கள் தொடங்கி இருக்கிறது அது தொடர்பாக முடிவெடுக்க நேற்றைய தினம் அந்த கட்சியின் சட்டசபை உறுப்பினர்களின் கூட்டம் அந்த கட்சியின் தலைமை அலுவலகத்தில் கூட்டப்பட்டது.ஆனால் அப்போது ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தின் காரணமாக இது தொடர்பாக எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது அதே வேளையில் இதற்கு முன் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றும் இருவேறு கருத்துக்கள் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்று தேர்ந்தெடுப்பதற்காக வரும் திங்கட்கிழமை அன்று மீண்டும் அதிமுகவின் சட்டசபை உறுப்பினர் கூட்டம் கூட்டப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இந்நிலையில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வரும் கேபி முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் ஆகிய இருவரும் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள் அவர்கள் வெற்றி பெற்ற அந்த நொடியே எம்பி பதவியோ அல்லது எம்எல்ஏ பதவியோ ஏதாவது ஒரு பகுதியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற நிர்பந்தத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள்.

எதில் கேபி முனுசாமி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோற்ற பின்னரும்கூட விடாப்பிடியாக நியமன மக்களவை உறுப்பினர் பதவியை வாங்கி தன் வசம் வைத்திருக்கிறார் அதேநேரம் அவர் தற்போது நடைபெற்ற சட்டசபை தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்.அப்படி இருக்க அவர் மாநில அரசியலில் கவனம் செலுத்த வேண்டும் என நினைத்திருந்த சமயத்தில் தான் அதிமுக தோல்வியை சந்தித்திருக்கிறது ஆகவே மாநிலத்தில் அதிமுக ஆளும் கட்சியாக இருந்தால் மட்டுமே நாம் நினைத்ததை சாதித்துக் கொள்ள இயலும் அப்படி இருக்கும்போது சட்டசபை உறுப்பினர் பதவியில் நாம் இருப்பதைவிட நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பதவியை மேல் என்று அவர் கருதுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதோடு மட்டுமல்லாமல் விரைவில் மத்திய அரசு அமைச்சரவையில் விரிவாக்கம் செய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அந்த சமயத்தில் அவருக்கு அமைச்சரவையில் இடம் அளிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது ஆகவே கேபி முனுசாமி நிச்சயமாக சட்டசபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.