இவரு நல்லவரா?? இல்ல கெட்டவரா?? முதல்வர் ஸ்டாலின் செய்த வாயடைக்கும் செயல்!!

0
80
Is this person good or bad? stalin's wow action
Is this person good or bad? stalin's wow action

இவரு நல்லவரா?? இல்ல கெட்டவரா?? முதல்வர் ஸ்டாலின் செய்த வாயடைக்கும் செயல்!!

தமிழகத்தில் கடந்த 2011 ம் ஆண்டு ஆட்சி அமைத்த அதிமுக அரசு   அதை கொண்டாடும் விதமாக, சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வரும் தலைமை செயலக கட்டிடத்தின் வலது புறத்தில் பெரிய அளவில் ஜெயலலிதாவின் முழு உருவப்படத்தை வைக்கபட்டது. பின் 2016 ஆம் ஆண்டு மீண்டும் ஆதிமுக அரசே ஆட்சி அமைத்ததால் அந்த படத்தை அகற்றாமல் இருந்தது. 2019 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட லோக் சபா தேர்தல் விதிமுறைகளின் பெயரில் தலைமை செயலகத்தில் உள்ள கட்சி தலைவர்கள் படங்களை அகற்றினர். பின் தேர்தல் முடிந்ததும் மீண்டும் அந்த படம் அங்கு பொருத்தப்பட்டது. ஜெயலலிதாவின் அந்த உருவ படம் கடந்த வியாழன் வரையில் அப்படியே பாதுகாக்கப்பட்டு வந்தது.

தற்போது நடந்து முடிந்த சட்ட சபை தேர்தலில் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு  திமுக இந்த ஆண்டு நடைபெற்ற சட்ட சபை தேர்தலில் 159 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. மேலும் இதில் திமுக 133 இடங்களில் வெற்றி பெற்றுறது.  இந்த தேர்தலில் திமுக 173 இடங்களில் போட்டியிட்டது. அதிமுக கூட்டணி 75 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

இதனால் தலைமை செயலகத்தில் பொருத்தப்பட்ட ஜெயலலிதா அவர்களின் புகைப்படங்கள் மற்றும் சாமி படங்கள் அனைத்தும் நீக்கபட்டது. மேலும் புதிய முதல்வரான ஸ்டாலின் அவர்கள் பதவியேற்று தலைமை செயலகத்திற்கு வருவதர்க்கு முன்னால் அவரின் புகைப்படங்களை அங்கு பொருத்தப்பட  வேண்டும் என்று நினைத்து தலைமை செயலக அதிகாரிகளே ஸ்டாலின் மற்றும் மறைந்த கருணாநிதி அவர்களின் புகைப்படங்களை தலைமை செயலகத்தில் பொருத்த வேண்டும் என்று நினைத்து இந்த மாற்றத்தை செய்ததாகக் கூறபப்டுகிறது. இந்த நிலையில் முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல்  முறையாக தலைமை செயலகத்திற்கு வருகை தந்த  போது அங்கிருந்த மறைந்த  கருணாநிதி அவர்களின் புகைப்படங்களும்  மற்றும் ஸ்டலின் அவர்களின் புகைப்படங்களும் அங்காங்கே பொருத்தப்பட்டிருப்பதை கண்டு இது கட்சி அலுவலகம் கிடையாது பொது மக்களுக்கு சேவை செயும் இடம் இங்கிருந்து உடனடியாக அந்தப் படங்களை நீக்க வேண்டும் என்று உத்தவிட்டதை அடுத்து உடனடியாக அங்கு பொருத்தப்பட்ட அவரின் புகைப்படங்கள் அனைத்தும் நீக்கபட்டது.

author avatar
CineDesk