சாத்தான்குளம் கொலை வழக்கில் மேல்முறையீடு! ஹைகோர்ட் அளித்த உத்தரவு?
கடந்த வருடம் கொரோனா பரவலின் காரணமாக நாடு முழுவதும் லாக்டவுன் அறிக்கப்பட்டிருந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான தந்தை மற்றும் மகனின் மரணம் நாடு முழுவதிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது நாம் அறிந்ததே.இதற்கு பல காரணங்கள் சொன்னாலும் கடைதிறந்த காரணத்திற்காக போலீசார் இவர்களை லாக்கப்பில் வைத்து சித்ரவதை செய்தது யாராலும் மறக்க முடியாத ஒன்று ஆகும்.
இதன் காரணமாக கடந்த வருடம் ஜூன் மாதம் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் இருவரும் அதே லாக்கப்பில் மரணித்தனர்.இந்த சம்பவம் யாராலும் மறக்கமுடியாத நிகழ்வாகவும், அனைவரையும் மிகுந்த வருத்தத்திலும்,அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது.
இந்த வழக்கில் கடந்த ஆண்டு செப்டெம்பரில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து இரண்டு வழக்குகளில், 9 போலீசார் மற்றும் அதிகாரிகள் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் என கூறியது.இந்த வழக்கின் மூலம் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், தற்போது ஜாமீன் கேட்டு சென்னை ஹைகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை தள்ளுபடி செய்தது.அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செயப்பட்டது.அந்த மனுவில் மனுதாரரான ஸ்ரீதர், தப்பிச்செல்லவும், சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களை கலைக்கும் பேச்சுக்கே இடம் இல்லை என தெரிவிக்கப்பட்டது.அதே நேரத்தில் சுப்ரீம் கோர்ட் ஜாமீன் வழங்குவற்கான நெறிமுறைகளை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.அதை கருத்தில் கொள்ளாது ஹைகோர்ட் மதுரை கிளை ஸ்ரீதரின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனால் ஸ்ரீதரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது.அவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த இந்த மனுவின் விசாரணை விரைவில் மேல்முறையீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.