இன்றைய சட்டசபை உறுப்பினர்களின் கூட்டத்தில் அதிரடி முடிவை எடுக்கப் போகும் அதிமுக!

0
73

தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருக்கிறது.அந்த கட்சி தனித்து 125 இடங்களில் வெற்றி அடைந்திருக்கிறது, கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து சுமார் நூற்று 59 தொகுதிகளில் அந்த கூட்டணி வெற்றி அடைந்திருக்கிறது.இந்த நிலையில், அதிமுகவும் 65 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. அந்த கட்சி கூட்டணி கட்சிகளுடன் இணைந்து 25 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. ஆகவே அந்த கட்சியை சட்டசபையில் எதிர்க்கட்சி வரிசையில் அமர இருக்கிறது.

இதையடுத்து அந்த கட்சியின் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை சென்னை ராயப்பேட்டையில் இருக்கின்ற அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்தது. அந்த கட்சியை சார்ந்த சட்டசபை உறுப்பினர்கள் அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டத்திற்கு வருகை தந்திருந்த சூழ்நிலையில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வருகையின்போது இபிஎஸ் ஆதரவாளர்களும், ஓபிஎஸ் ஆதரவாளர்களும், வாக்குவாதம் செய்தார்கள். அதோடு கூட்டத்திலும் வாக்குவாதம் உண்டானது இதனால் கூட்டம் உடனடியாக ஒத்தி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக அதிமுகவின் தலைமை கழகம் வெளியிட்ட இருக்கின்ற ஒரு அறிவிப்பில் அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம் வரும் பத்தாம் தேதி காலை ஒன்பது முப்பது மணி அளவில் கழக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் தலைமையில் நடைபெற இருக்கிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதாவது இன்றைய தினம் அந்தக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று நடைபெறும் அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டத்தில் எதிர்க்கட்சித்தலைவர் யாரென தெரிந்துவிடும். நாளை தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற இருப்பதால் இன்று எதிர்க்கட்சித் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் அதிமுக இருக்கிறது.