திடீரென 10 மடங்கு அதிகமாக உயர்ந்த உயிரிழப்பு!! கூச்சலிடும் மக்கள்!!
கொரோனா பரவல் கடந்த ஒன்றரை வருடமாக மக்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்து வருகிறது. இதன் கோரதாண்டவத்தால் மக்கள் பெரும் பீதியில் உள்ளனர். உயிர்களை பாதுகாக்க இன்றா நாளைய என்ற நிலைக்கு வந்துவிட்டனர். மேலும் தற்போது இந்த வருடம் பரவி வரும் கொரோனா வைராஸின் 2 ஆம் அலை அதிக வீரியத்தை கொண்டுள்ளதால் கட்டுபாடுகள் மேலும் கடுமையாவே காணப்படுகிறது. இந்த நிடையில் ஆக்சிஜன் தட்டுபாடு காரணமாக பல மக்கள் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர்.
கர்நாடகா, தமிழ்நாடு, டெல்லி, பஞ்சாப், ஜார்கண்ட், ஹரியானா, சத்தீஸ்கர், மற்றும் உத்தரகண்ட் போன்ற இந்திய மாநிலங்கள் கடந்த 40 நாட்களில் அளவுக்கு அதிகமாக கொரோனா நோயளிகளின் இறப்புகளை பதிவு செய்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.ஆனால் மகராஷ்டிரா மட்டுமே கடந்த மாதம் இறுதி வரை. இந்தியா முழுவதும் ஏற்ப்பட்ட உயிரிழப்பில் 3 –ல் ஒரு பங்கு வகிக்கிறது.
இந்தியாவில் ஜார்கண்ட், உத்தரகாண்ட், ஹரியானா போன்ற சியா மாநிலங்களில் சில மாதங்களுக்கு முன்பு ஒரு நாளைக்கு சுமார் 400 கொரோனா நோயாளிகள் வரை தான் உயிரிழப்பு காணப்பட்டது. ஆனால் தற்போது இது போன்ற சி,று மாநிலங்களில் ஒரு நாளைக்கு 4,000-க்கும் அதிகமாக இறப்புகள் உள்ளது. மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் தினமும் அதிகபட்ச கொரோனா நோயாளிகளின் இறப்புகளைப பதிவு செய்து வருகிறது.
இந்த நிலையில் மற்ற சிறு மாநிலங்களிலும் உயிரிழப்புகள் விரைவாக அதிகரித்து வருகிறது. ஆனால் தற்போது மகாராஷ்டிராவில் அந்த பங்கு ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே. ஏனெனில் சிறு, சிறு மாநிலங்களில் உயிரிழப்புகள் அதிகம் பதிவானதே இதற்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.