தமிழகத்தில் 69 சதவிகித இட ஒதிக்கீடு காப்பாற்றப்படும்! அமைச்சர் உறுதி!

0
131

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் போன்ற 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அமைச்சரவையில் தீர்மானத்தின் நிவாரண எந்தவிதமான முடிவும் எடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. அதோடு அவர் பல்நோக்கு விசாரணை ஆணையத்தில் விசாரணை நிலுவையில் இருப்பதை அதற்கான காரணமாக, தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து தமிழக ஆளுநர் எந்தவித முடிவும் எடுக்காமல் இருப்பதற்கு உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்தது. இதுதொடர்பாக உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என்று அப்போதைய எதிர்கட்சியான திராவிட முன்னேற்ற கழகம் உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆளுநருக்கு கோரிக்கை வைத்து வந்தார்கள்.
தற்சமயம் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையில் ஆட்சி அமைந்திருக்கின்ற ஒரு நிலையில், 7 பேர் விடுதலை தொடர்பாக விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி போன்ற கட்சிகள் வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில், தமிழகத்தின் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆகியோர் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அவர்களின் வீட்டில் 7 பேர் விடுதலை தொடர்பாக ஆலோசனையை செய்திருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் இருக்கின்ற சிக்கல்கள் ஆளுனர் தாமதம் செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல் கிடைத்திருக்கிறது.

அதன் பின்னர் நேற்று இரவு பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி 7 பேர் விடுதலை தொடர்பாக ஆலோசனை செய்து விரைவாக முதல்வர் நல்ல முடிவை எடுப்பார். இந்த விவகாரத்தில் தேவைப்படும் ஆனால் அரசு மீண்டும் தீர்மானத்தை நிறைவேற்றும் என்றும் தெரிவித்திருக்கிறார். அதோடு விரைவாக அடுத்த கட்ட ஆலோசனை செய்ய வருகிறோம் என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்திருக்கிறார்.

மராத்தா இட இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது இந்த நிலையில், தமிழகத்தில் 69 சதவிகித இட ஒதுக்கீடு தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது என்று தெரிவித்த அமைச்சர் ரகுபதி, தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாப்பதுதான் முதலமைச்சரின் முழுமையான நோக்கம் இட ஒதுக்கீடு காப்பாற்றப்பட்டு அது நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்திருக்கிறார்.

Previous articleஹலோ யார் பேசறது! சட்டசபைக்குள் திமுக எம்எல்ஏ அட்டகாசம்!
Next articleஇனி இந்த கடைகளுக்கும் அனுமதி! அதிரடி உத்தரவை பிறப்பித்த தமிழக அரசு!