இனி இந்த கடைகளுக்கும் அனுமதி! அதிரடி உத்தரவை பிறப்பித்த தமிழக அரசு!

0
83

நோய்த்தொற்று அதிகரிப்பதை அடுத்து சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருந்துகளை பயன்படுத்தினால் இந்த நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டதன் காரணமாக, நோய் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள அனேக மக்கள் சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருந்துகளை வாங்கி உட்கொண்டு வருகிறார்கள். இதன் காரணமாக ஊரடங்கு போடுவதற்கு முன்பு சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

இவ்வாறான சூழ்நிலையில், நோய்த்தொற்று காரணமாக, அதனை கட்டுப்படுத்தும் விதத்தில் தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் முதல் வரும் 24ஆம் தேதி வரையில் முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், ஊரடங்கு காலத்தில் 12:00 மணி வரையில் அத்தியாவசிய கடைகள் மட்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

மளிகை கடைகள் மற்றும் காய்கறி கடைகளை போல பழக்கடைகளும் மதியம் 12 மணி வரையில் செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. அதேபோல இங்கிலீஷ் மருந்து கடைகளை போல நாட்டு மருந்து கடைகளிலும் செயல்படுவதற்கு தமிழக அரசு அனுமதித்திருக்கிறது. நோய்தொற்று விதிகளை கடைபிடித்து வியாபாரம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக தமிழக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.