முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் ஸ்டாலின்!

தமிழகத்தில் நோய்த்தொற்று பரவாமல் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை கடைபிடிக்க ஊரடங்கு செயல்படுத்துவது தொடர்பாக தொழில் மற்றும் வணிக சங்க அமைப்புகள் கடந்த 9ஆம் தேதி முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இந்தக் கூட்டத்தில் சிறு ,குறு தொழில் நிறுவனங்கள் மற்றும் ஆட்டோ, கால்டாக்சி போன்ற வாகனங்களை வைத்திருப்பவர்கள் வங்கிகளுக்கு கொடுக்க வேண்டிய மாதாந்திரத் தவணைத் தொகையினை கட்டுவதற்கும் காலநீட்டிப்பு அளிப்பது தொடர்பாக, ஒன்றிய அரசு மற்றும் மத்திய ரிசர்வ் வங்கிக்கு வலியுறுத்தப்படும் எனவும், முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

அதன் அடிப்படையில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அவர்களுடைய கடன் சுமையை குறைக்கும் விதமாக 6 மாத காலத்திற்கு அவகாசம் வழங்க வேண்டும் எனவும், இந்த காலத்திற்கு வட்டி வசூல் எதுவும் வசூலிக்கப்பட கூடாது எனவும், தொழிலாளர்களிடம் இருந்து மாதந்தோறும் வசூல் செய்யப்படும் வருங்கால வைப்பு நிதி மற்றும் தொழிலாளர் ஈட்டுறுதி தொகையை 6 மாதங்களுக்கு பிடித்தம் செய்ய கூடாது என வலியுறுத்தி பிரதமர் அவர்களுக்கும், ரிசர்வ் வங்கியின் ஆளுநர் அவர்களுக்கும் கடிதம் ஒன்றை எழுதி இருக்கின்றார் என்று தமிழக அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Leave a Comment