முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பால் அதிர்ச்சிக்குள்ளான திமுகவினர்!

0
166

நோய்த்தொற்று நிவாரணப் பணிகளுக்கு நீதி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட கோரிக்கையின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் முதலமைச்சருக்கான நிவாரண நிதிக்கு பணத்தை அனுப்பி வருகிறார்கள்.

அந்த விதத்தில் நடிகர் சிவகுமார், சூர்யா, கார்த்தி, உள்ளிட்டோர் நேற்று முன்தினம் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து ஒரு கோடி ரூபாய் பணத்தை நிவாரண நிதிக்காக வழங்கி விட்டு வந்தார்கள். அதனைத் தொடர்ந்து இன்று நடிகர் ரஜினிகாந்த் ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதியை வழங்கினார். அதோடு நடிகர் அஜித்குமார் 25 லட்சம் நிவாரண நிதியை வழங்கினார் இவர் இனைய தளம் மூலமாக முதல்வரின் நிவாரண நிதிக்கு பணத்தை அனுப்பி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கின்ற ஒரு அறிவிப்பில் நோய்த் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக, தமிழகம் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது இந்த நிலையில், திராவிட முன்னேற்ற கழகத்தின் சட்டசபை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் என தெரிவித்திருக்கிறார்.

Previous articleபொது நிவாரண நிதிக்கு பணம் வழங்கிய ரஜினிகாந்த்!
Next articleவிஜய் தொலைக்காட்சியில் தொடர்ந்து ஏற்படும் சோகம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here