திடீரென 15 காவல்துறையினரை தூக்கி அடித்த தமிழக அரசு! காரணம் என்ன தெரியுமா!

0
119

தமிழக அரசு இன்றைய தினம் வெளியிட்டிருக்கின்ற அறிவிப்பில் 15 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கின்ற உத்தரவு என்னவென்றால் சென்னை குற்றப்பிரிவு ஏடிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.

சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபி ஆக ஆபாஷ்குமார் அவர்களும், பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக தினகரன் அவர்களும், நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவு கண்காணிப்பாளராக சுரேஷ்குமார் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.

வெயிட்டிங் லிஸ்டில் இருந்த பிரதீப் பி ஃபிலிப் தமிழக காவல்துறை அகாடமி இயக்குனராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். கூடுதல் காவல்துறை இயக்குனராக ஜெயந்த் முரளி உட்பட 15 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். என்று தமிழக அரசு சார்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

Previous articleஅமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கு முதல்வரிடம் இருந்து வந்த கோரிக்கை!
Next articleஇந்த வயதிலும் இப்படி ஒன்று சாத்தியமா? அசந்து போன மக்கள்!