இந்த வயதிலும் இப்படி ஒன்று சாத்தியமா? அசந்து போன மக்கள்!

0
49
Is something like this possible at this age? Incredible people!
Is something like this possible at this age? Incredible people!

இந்த வயதிலும் இப்படி ஒன்று சாத்தியமா? அசந்து போன மக்கள்!

கொரோனா இரண்டாவது அலை அனைவரையும் வாரி சுருட்டி விடும் போல பலரை பாதித்து, உயிரை மாய்த்து வருகிறது.தற்போது நடக்கும் சம்பவங்கள் அனைவரும் அறிந்ததே.எல்லாவற்றிலும் தடை நீடிக்கிறது.

இந்நிலையில் 105 வயதுடைய ஒருவர் ஐந்தே நாட்களில் கொரோனாவை விரட்டி வீடு திரும்பி உள்ளார் என்றார் உங்களால் நம்ப முடிகிறதா?

ஆனால் கர்நாடகா மாவட்டத்தில் இப்படி ஒரு மகிழ்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது.கர்நாடகாவில் மைசூர் அருகே உள்ள ஹாரோஹள்ளியை சேர்ந்த துரைசாமி என்பவர் 1918-ம் ஆண்டு பிறந்தவர்.

இவர் மகாத்மா காந்தியின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு சிறைச்சாலை சென்றவர்.சுதந்திரதிற்கு பிறகு சுதந்திர இந்தியாவில் பல ஊழலுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்று வந்தார் என்பது குறிப்பிடப்பட்டது.

இந்நிலையில் கடந்த வாரம் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ஜெயதேவா மருதுவமனையின் இயக்குனரும், முன்னாள் பிரதமர் தேவகௌடாவின் மருமகனுமான மஞ்சுநாத் அவர்கள், தியாகி துரைசாமிக்கு தேவையான உதவிகளை செய்தார்.

இதனை அடுத்து தியாகி பூரணமாக குணமடைந்து வீடு திரும்பினார்.இதைப்பற்றி அவர் கூறுகையில், நோய் தொற்று அடைந்த போதிலும் தியாகி அவர்கள் அச்சமடையவில்லை என்றும், காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு இருந்த போதிலும் அவர் மற்றவர்களை போல் துவண்டு விடவில்லை என்றும் கூறினார்.

தகுந்த நேரத்தில் சரியான சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றதால் அவருக்கு மேலும் தொற்று பரவுவது நிறுத்தப்பட்டது.எனவே அவரால் கோரோனாவை வெற்றி கொள்ள முடிந்தது என்றும் கூறினார்.மேலும் சுதந்திர போராட்ட வீரர் மட்டுமல்ல கோரோனாவையும் வெற்றி கொண்ட வீரர் எனவும் புகழாரம் சூடினார்.

இதை பற்றி தியாகி அவர்கள் கூறுகையில், கொரோனா ஒன்றும் கொடிய நோய் அல்ல என்றும், தன்னம்பிக்கையுடன் இருந்தால் அதை வெற்றி கொள்ளலாம் எனவும், வைரஸ் தாக்கிய உடன் தகுந்த மருத்துவ சிகிச்சை எடுத்து கொள்வதும், நல்ல ஆலோசனை பெறுவதும் நம்மை ஆபத்தில் இருந்து காத்து கொள்ள உதவும் என்றும் கூறினார்.

மேலும் அவர் பயமே நம்மை கொள்ளும் ஆயுதம் என்றும், 103 வயதில் நானே ஐந்து நாட்களில் அதை வென்று வீட்டிற்கு திரும்பியதால் யாரும் பயப்படாமல் தன்னம்பிக்கையோடு எதிர்த்து போராடுங்கள் என்றும் கூறினார்.இதுவே நான் இளையோருக்கு கூறும் தகவல் என்றும் சொன்னார்.