கொரோனாவை அழிக்க வந்தது புதிய மருந்து! இனி ஆக்ஸிஜனுக்கு பாய் பாய்!
கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக மக்களை விடாமல் துரத்தி வருகிறது. மக்கள் இந்தக் குழுவின் இரண்டாவது அலையை கொத்துக்கொத்தாக உயிரிழந்து வருகின்றனர்.இந்த இரண்டாவது அலையினால் மக்கள் ஆக்சிஜன் இன்றியும் கொரோனா தடுப்பூசி இன்றியும் தவித்து வருகின்றனர். இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு கொரோனா சிகிச்சைக்கான மருந்து ஒன்றை புதிதாக கண்டுபிடித்துள்ளனர்.இன்று முதல் அந்த மருந்து அமலுக்கு வருகிறது.
2-Deoxy-D-Gulcose ஆகியவற்றின் கலவையில் டிஆர்டிஓ அமைப்பின் ஆய்வகமான இன்ஸ்டியூட் ஆஃப் நியூக்ளியர் மெடிசன் அண்ட் அலைட் சயின்ஸ்,டாக்டர் ரெட்டிஸ் மருந்து நிறுவனத்துடன் இணைந்து 2 டிஜி கொரோனா மருந்தை தயாரித்துள்ளனர்.இந்த மருந்தை மக்கள் உபயோகிப்பதற்கு ஏற்றதா என மூன்று கட்டங்களாக ஆய்வு செய்தனர்.அந்த ஆய்வில் இந்த மருந்தானது உடம்பில் இருக்கும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் என்பது தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வு முதலில் கடந்த ஆண்டு மே மாதம் மத்திய மருந்து தர கட்டுப்பாடு அமைப்பு மனிதர்களுக்கு இரண்டாவது கட்ட பரிசோதனை நடத்த அனுமதி தந்தது.
அதனையடுத்து டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் மற்றும் டிஆர்டிஓ ஆகியவை இணைந்து அந்த பரிசோதனையை கொரோனா நோயாளிகளுக்கு செலுத்தினர்.இந்த பரிசோதனை இந்தியாவில் மொத்தம் ஆறு மருத்துவமனைகளில் நடைபெற்றது. அதனையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மூன்றாவது பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டது.இந்த பரிசோதனை டிசம்பர் மாதம் 2020 முதல் 2021 மார்ச் வரை 27 கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையில் உள்ள 220 நோயாளிகள் மீது பரிசோதனை செய்தனர்.
இதனையடுத்து மூன்றாவது பரிசோதனையில் பெறப்பட்ட முடிவுகள் அனைத்தும் பிசிசிஐ என்ற அமைப்பில் சமர்ப்பிக்கப்பட்டது.அதில் டிஆர்டிஓ கண்டுபிடித்த 2டிஜி மருந்து கொரோனா தொற்றில் உள்ள நோயாளிகளுக்கு மிகவும் சிறப்பாக செயல்படுகிறது. கொரோனா தொற்றால் அதிக அளவு ஆக்சிஜன் தேடி மக்கள் அலைகின்றனர் அவர்கள் இந்த மருந்தை உட்கொள்ளும்போது ஆக்சிஜன் தேவையின்றி சராசரியான மனிதரைப் போல் சுவாசிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஒன்றாம் தேதி டிஆர்டிஓ தயாரித்த 2டிஜி மருந்தை அவசர காலத்துக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என பிசிசிஐ அனுமதி தந்துள்ளது. ஆக்சிஜன் தேவையோடு இருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு இம்மருந்தை தண்ணீரில் கலந்து கொடுக்கலாம்.அதன் மூலம் ஆக்சிஜன் தேவை இன்றி சராசரியாக சுவாசிக்க முடியும் என கூறியுள்ளனர்.
இந்த மருந்து கொடுப்பதன் மூலம் உடலிலுள்ள வைரஸ்கள் பாதிக்கப்பட்ட செல்களை அடையாளம் கண்டு ஒருங்கிணைந்து புதிதாக எந்த செல்களும் பாதிக்கப்படாமல் தடுக்கும் திறன் கொண்டது எனவும் கூறுகின்றனர்.இந்த 2டிஜி மருந்து இன்று முதல் உபயோகத்திற்கு வருகிறது.இந்த மருந்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரான ராஜ்நாத்சிங் மற்றும் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்த்தன் இருவரும் சேர்ந்து கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளின் பயன்பாட்டிற்கு வெளியிடுகின்றன.