அதிமுக தலைமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அதிமுக சார்பாக ஒரு கோடி ரூபாய் மற்றும் கட்சியின் நாடாளுமன்ற மற்றும் சட்டசபை உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியம் வழங்கப்படும் என்று அதிமுக சார்பாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
அந்தக் கட்சியின் தலைமை இது தொடர்பாக வெளியிட்டிருக்கின்ற அறிவிப்பு ஒன்றில் நோய் தொற்று காரணமாக கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் தமிழக மக்களுக்கு மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கவும், உரிய நிவாரணங்களை வழங்க அதிமுக சார்பாக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் அதோடு கழகத்தின் நாடாளுமன்றம் மற்றும் சட்டசபை உறுப்பினர்கள் ஒரு மாத ஊதியமும் நிவாரண பணிகளுக்கு என்று முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த நோய்த் தொற்றில் முதல் அலை வீசிய போதும் கடந்த வருடம் அதிமுக சார்பாக தமிழக அரசிடம் ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டது. தற்சமயம் தமிழக அரசிடம் ஒரு கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. அதோடு எங்களுடைய நாடாளுமன்ற மற்றும் சட்டசபை உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியம் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதோடு கழகத்தின் உடன் பிறப்புகள் தங்கள் பகுதிகளில் அல்லலுறும் மக்களுக்கு கரம் நீட்டி உதவி புரியுங்கள் என்று அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது என குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே நடிகர், நடிகைகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் போன்ற நிறுவனங்கள் மூலம் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அதிமுக சார்பாகவும் நிதி உதவி வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடதக்கது.