சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொரோனா நிவாரண நிதியாக 50 லட்சம் வழங்கினார்! முதல்வரிடம் ஒப்படைப்பு!

0
64

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரப்பில் மிக அதிகமாக இருந்து வருகிறது நேற்று ஒரே தினத்தில் 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனை தொடர்ந்து இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. ஆனாலும் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் குறைந்தபாடில்லை. மருத்துவ ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் அவசர ஊர்திகள், தடுப்பு மருந்துகள், படுக்கைகள் என்று பலவற்றிற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில், நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கும் அமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அமைச்சர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் தீவிர தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையில் நோய்த்தொற்று பரவலுக்கான நிவாரண நிதியாக மக்கள் உதவி அளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். அதற்காக வங்கிக் கணக்கும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது பலரும் தங்களால் முடிந்த உதவிகளை தமிழக அரசுக்காக செய்து வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் இந்த தடுப்பு பணிகளுக்கான நிவாரண நிதியாக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியிருக்கிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் இந்த நிவாரண நிதியை வழங்கியிருக்கிறார். அதோடு நோய்த்தொற்றை தடுப்பதற்கு எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

ஏற்கனவே ரஜினிகாந்த் அவர்களின் இளைய மகள் சௌந்தர்யா மற்றும் பல நடிகர் நடிகைகள் தமிழக அரசுக்கு நிதியுதவி வழங்கி வருகிறார்கள். இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் 25 லட்சம் ரூபாயும், இயக்குனர் சங்கர் 10 லட்சம் ரூபாயும், இயக்குனர் வெற்றிமாறன் பத்து லட்சம் ரூபாய், அஜித் 25 லட்சம் ரூபாய் வழங்கியிருக்கிறார்கள். அதேபோல கவிஞர் வைரமுத்து, சௌந்தர்யா ரஜினிகாந்த் நடிகர் சிவகுமார் குடும்பம், நடிகர் சிவகார்த்திகேயன் நடிகர் ஜெயம்ரவி சக்தி மசாலா நிறுவனம் உள்ளிட்ட பலரும் தமிழக அரசுக்கு நிதி உதவி வழங்கி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.