முன்கள பணியாளரையும் விட்டு வைக்கவில்லை! என்ன ஒரு அவலம்!
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தமிழகம் முழுவதும் நேற்று மட்டும் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 706 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.புதிதாக 33 ஆயிரத்து 181 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதிகபட்சமாக சென்னையில் 6 ஆயிரத்து 247 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதால், சென்னையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்து 146 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்றை கண்டறிய சென்னை மாநகராட்சி முழுவதிலும், 15 மண்டலங்களிலும் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் நியமித்து காய்ச்சல் பரிசோதனை செய்ய களமிறக்கி உள்ளனர்.இந்த ஊழியர்கள் வீடு வீடாக சென்று காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகளையும், உடல் வெப்ப நிலையையும் சோதனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை ஏழு கிணறு பகுதியில் மாநகராட்சி முன்கள ஊழியர் ஆக 27 வயதுடைய பெண் ஒருவர் வீடுகளுக்கு சென்று சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டார்.அப்போது, போர்ச்சுகீசு சர்ச் தெருவில் ஒரு குடியிருப்பில் பரிசோதனை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது, சதக்கத்துல்லா என்பவர் வீட்டிற்கு சென்றுள்ளார்.அதற்கு அவர் தன் மனைவிக்கு காய்ச்சல் என்றும், உள்ளே வந்து சோதனை செய்யவும் கூறியுள்ளார்.
உள்ளே யாரும் இல்லை என்பதை உணர்த்த அந்த பெண் சுதாகரிப்பதற்குள் பின்பக்கம் இருந்து ஆபாசமாக நடந்து கொண்டுள்ளார்.அந்த பெண் கூச்சலிட்டு அக்கம், பக்கத்தில் உள்ளோர் ஓடி வந்து அவரை தர்மஅடி வைத்தனர்.பின் அந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில், சதக்கத்துல்லாவை பெண்ணை மானபங்கம் செய்தல், பாலியல் அத்துமீறல் போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
அந்த நபருக்கு 54 வயது எனவும், மனைவி மற்றும் குழந்தைகள் இந்த வீட்டில் இல்லாததை பயன்படுத்தி, இளம் வயது முன்கள பணியாளரிடம் அவ்வாறு நடக்க திட்டமிட்டு அவ்வாறு அத்துமீறி நடந்துள்ளார் என்பதை ஒத்துக்கொண்டார்.