சொந்த கட்சியை விமர்சனம் செய்த பாஜக எம்எல்ஏவால் பரபரப்பு!

0
157

நான் அதிகமாக பேசினால் என் மீது தேசவிரோத நடக்கை போடுங்கள் என்று உத்தரபிரதேச பாரதிய ஜனதா கட்சியின் அரசை சொந்த கட்சி சட்டசபை உறுப்பினர் ஒருவரை விமர்சனம் செய்திருப்பது அந்த மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

உத்திரபிரதேசம் சீதாப்பூரில் அரசு விபத்து காயம் மருத்துவமனை மையக் கட்டிடம் பயன்பாட்டிற்கு வருவதற்கு தயார் நிலையில் பல வருடங்களாக இருந்து வருகிறது. இருந்தாலும் இன்று வரையில் அந்த மையம் செயல்பாட்டுக்கு வரவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், அந்த மையம் செயல்பாட்டிற்கு வருவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் சட்டசபை உறுப்பினர் ராக்கேஷ் ரத்தோரியிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு பதிலளித்த அவர் நான் பல நடவடிக்கைகள் மேற்கொண்டு இருக்கிறேன். ஆனால் சட்ட சபை உறுப்பினர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது நான் அதிகமாக பேசினால் என்மீது தேசத்துரோக குற்றச்சாட்டுக்கள் எழுதலாம் என்று தெரிவித்திருக்கிறார். இதனை தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் ஒரு சட்டசபை உறுப்பினராக நீங்கள் உங்களுடைய சொந்த அரசாங்கத்திற்கு பிரதிநிதித்துவம் செய்ய இயலாது என்று தெரிவிக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

பத்திரிக்கையாளர்களின் இந்த கேள்விக்கு பதில் தெரிவித்த ராகேஷ் ரத்தோர்,எங்கள் மனதில் உள்ளதை பேச இயலுமென நீங்கள் கருதுகிறீர்களா? இதற்கு முன்னர் நான் கேள்வியெழுப்பி இருப்பது உங்களுக்கு தெரியுமல்லவா என பாஜகவை விமர்சனம் செய்திருக்கிறார்..அவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது புதிதல்ல என சொல்லப்படுகிறது.சென்ற நாடாளுமன்ற தேர்தலின்போது பிரதமர் மோடியை விமர்சனம் செய்தார் என்பது நினைவிருக்கலாம்.. ராகேஷ் ரத்தோர் கடந்த 2017 ஆம் வருடத்தில் அந்த மாநில சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார் அதற்கு முன்னர் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது.

Previous articleமேட்டூர் அனல் மின் நிலையத்தில் அதிகாலை பயங்கர தீ விபத்து! பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!
Next articleபிரதமர் தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டம்! முதல்வர் பங்கேற்பு!