பிரதமர் தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டம்! முதல்வர் பங்கேற்பு!

0
50

நோய் தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்துவரும் ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனைக் கூட்டத்தில் முதல்முறையாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று இருக்கிறார்.

இதில் முக்கிய அம்சமாக பார்க்கப்படுவது தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றுவரும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் மத்திய அரசு எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் அதனை எதிர்ப்பதையே தன்னுடைய முழு மூச்சாக கொண்டு இருப்பவர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அப்படி இருக்கும் போது அவர் தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்ற இருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தநிலையில், நேற்று கூட மத்திய கல்வி அமைச்சர் பொக்ரியால் தலைமையில் நடைபெற்ற அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசு சார்பாக கல்வித்துறை அதிகாரிகளை மட்டுமே அனுப்பிவிட்டு கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அனுமதி கேட்டும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு ஸ்டாலின் அவரை அனுமதிக்கவில்லை.

அதிமுக ஆட்சியில் இருந்த சமயத்தில் பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் தான் நினைத்ததை உடனடியாக செய்து முடித்தது. ஆனால் தற்போது திமுக ஆட்சிக்கு வந்திருக்கும் நிலையில், தான் நினைக்கும் எந்த ஒரு விஷயத்தையும் தமிழகத்திடம் உடனடியாக செய்து முடிக்க இயலாத ஒரு நிலையில் இருந்து வருகிறது மத்திய அரசு.