கொரோனா போல கருப்பு போன்ற என்னும் நோய் மனிதர்களை தாக்கி பெரும் அவதிக்கு ஆளாக வைக்கிறது. கருப்பு பூஞ்சை என்றால் என்ன? அது யார் யாரை தாக்கும்? அதற்கான அறிகுறிகள் என்ன? அதை பற்றி மருத்துவர்கள் என்ன கூறுகிறார்கள்? அதற்கு எந்த மாதிரியான மருந்துகளைச் சாப்பிடலாம்? என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
1. கருப்பு பூஞ்சை என்பது நீண்ட காலமாக பூமியில் வாழும் நோயாகும். காற்று புகாத இடங்களில் இந்த தொற்று ஏற்படும். இது அனைவருக்கும் வருவதில்லை.நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை தாக்கும் என்று கூறப்படுகிறது.
2. இந்த கருப்பு பூஞ்சை நோய் தாக்கினால் கண், மூக்கு, காதுகளில் வீக்கம், தாடைகளில் வீக்கம், பல் களில் வீக்கம் போன்றவை ஏற்படும். ஒற்றைத் தலைவலி மூக்கில் ரத்தம் வடிதல் போன்றவையும் கருப்பு பூஞ்சை நோய் இருக்க அறிகுறிகளாக சொல்லப்படுகின்றன.
3. கருப்பு பூஞ்சை தாக்கிய பகுதியை சோதனை செய்து பார்க்கும் பொழுது கருப்பு நிறத்தில் பூஞ்சை தொற்றுக்கள் காணப்படுமாம் அதனாலேயே இதற்கு கருப்பு பூஞ்சை என பெயர் வந்துள்ளது என்று கூறுகின்றனர்.
4. அளவுக்கு அதிகமாக சர்க்கரை இருப்பவர்களுக்கு இந்த நோய் எளிதில் தாக்கிவிடும். ஸ்டீராய்டு மருந்துகளை அதிகமாக உட்கொள்ளும் மனிதர்களுக்கும் எளிதில் தாக்கும். ஸ்டீராய்டு மருந்துகளை அதிகமாகவும் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் சாப்பிடுவது உடலுக்கு கேடு விளைவித்து நோய் எதிர்ப்பாற்றல் மிகவும் குறையும் அதனால் இந்த கருப்பு போன்ற எளிதில் தொற்றிக் கொள்கிறது. மூச்சுத் திணறல்,நுரையீரல் பாதிப்பு,சிறுநீரக பாதிப்பு போன்றவை உள்ளவர்களுக்கும் எளிதில் தாக்கும்.
5. நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் ‘immuno suppression’ மாத்திரைகளை சாப்பிடுபவர்களுக்கும் கருப்பு பூஞ்சை நோய் தாக்கும்.
6. கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்த நோய் தாக்கும் அபாயம் உள்ளது. கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சுத்திணறல் வரும்போது ஸ்டீராய்டு மருந்துகளை உட்கொள்கின்றனர். அதனால் இந்த கருப்பு பூஞ்சை தொற்றிக் கொள்ளும் அபாயம் உள்ளது.
7. கொரோனா சிகிச்சை முடிந்து குணம் அடைந்த பின்பும் இந்த கருப்பு பூஞ்சை நோய்த் தொற்று கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு வரும் அபாயம் உள்ளது. காரணம் ஸ்டீராய்டு மருந்துகளை உட்கொள்வது.
8. இது படிப்படியாக கண் பார்வையை மங்கச் செய்து கண் பார்வை நரம்புகளை பாதிக்கும்.பலர் கண்பார்வை மங்கிய பின் சிகிச்சை அளிப்பதால் மூளைக்குச் செல்லும் நரம்புகள் தொற்றால் பாதிக்கப்படுவதை தடுக்க கண்களை அறுவை சிகிச்சை செய்து நீக்க வேண்டிய நிலைக்கு வந்து விடுகிறதாம்.
9. ஆரம்ப நிலையிலேயே இதனை அறிந்து குணப்படுத்தி விடலாம்.விட்டுவிட்டால் மூளையை பாதிக்கும் அபாயம் உள்ளது.இது சைனஸ்களையும், மூளை மற்றும் நுரையீரல்களையும் பாதிக்கும். மேலும் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும், புற்றுநோய் மற்றும் ஹெச்ஐவி அல்லது ஏய்ட்ஸ் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு நோயெதிர்ப்புக் குறைபாடுள்ள நபர்களுக்கும் இது ஆபத்தாக உள்ளது.
10. அம்ஃபோடெரிசின் – பி அல்லது `அம்ஃபோ-பி` என்பது பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு எட்டு வாரம் வரை தினமும் நரம்பில் செலுத்தப்பட வேண்டிய ஊசி ஆகும்.
11. லிபோசோமல் மருந்து பாதுகாப்பானது, அதிக திறன் மற்றும் குறைந்த பக்க விளைவுகளை கொண்டுள்ளதால் அதை அதிகமாக பயன்படுத்தி வருவதால் விலையும் அதிகமாக உள்ளது என்று தெரிவிக்கின்றனர்.
அதனால் பாதுகாப்புடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.