உடம்பில் பல மடங்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க அந்த காலத்தில் பாட்டி சொன்ன உருண்டை!

0
109

இப்பொழுது இருக்கும் காரோண கால கட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தி உடம்பில் இல்லாமல் அதிக நோய் தொற்று பரவி வருகிறது. இயற்கையாகவே நம் உடம்பில் உடல் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து உடலுக்கு வலு சேர்க்கும் அந்த காலத்து வழி முறையை பார்க்க போகின்றோம்.

 

தேவையான பொருட்கள்:

 

1. வேர்க்கடலை – 100g

2. ராகி மாவு- ஒரு கப்

3. நாட்டு சர்க்கரை- ஒரு கப்

4. நெய் – தேவையான அளவு

5. பேரிச்சை – ஒரு கப்

6. ஏலக்காய் பொடி- சிறிதளவு

 

செய்முறை:

 

1. முதலில் வேர்க்கடலை எடுத்து வறுத்து கொள்ளவும்.

2. பின் அதை தனியே எடுத்து கொள்ளவும்.

3. பின் அதே வானலியில் கொஞ்சம் நெய் ஊற்றி ராகி மாவை போட்டு வறுத்து கொள்ளவும்.

4. அது நன்கு வறுப்பட்டு வாசம் வரும் வரை நன்றாக வறுக்கவும்.

5. இப்பொழுது ஒரு மிக்ஸியில் வறுத்த வேர்க்கடலை போட்டு கொரகொரப்பாக அடித்து கொள்ளவும்.

6. பின் வேர்க்கடலை உடன் ராகி மாவு, நாட்டு சர்க்கரை, பேரிச்சை ஆகியவற்றை போட்டு அடித்து கொள்ளவும்.

7. பின் அதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி கொள்ளவும்.

8. அதில் சூடு செய்த நெய்யை ஊற்றி உருண்டை பிடிக்கவும்.

 

இதை எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடலாம். மிகவும் ருசியாக இருக்கும்.

வேர்க்கடலையில் உள்ள புரத சத்து உங்களுக்கு உடலுக்கு வலுவை சேர்க்கும்.

 

 

Previous articleஅனுபவம் உண்மை! ஆவி பிடிக்கும் போது இது சேர்த்தால் சளி, இருமல், நுரையீரலில் இருக்கும் தொற்று முழுமையாக அழிந்துவிடும்!
Next articleமூன்று நாள் மூன்று வேளை குடித்தால் போதும்! சளி காய்ச்சல் பறந்து போய்டும்!