ஒரு சிலருக்கு ஆவி பிடிக்கும் போது அதில் என்னென்ன பொருட்கள் சேர்க்க வேண்டும் என்பது பற்றி தெரியாது. இந்த மாதிரி வீட்டில் உள்ள பொருட்களை வைத்து ஆவி பிடிக்கும் பொழுது நோய் தொற்று கிருமிகள் ஏற்பட்டிருந்தாலும் தொண்டையிலேயே அழிந்துவிடும்.
ஆவி பிடிப்பதற்கான பொருட்கள் என்னவென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
1. ஒரு துண்டு இஞ்சி
2. வேப்பிலை 4 கைப்பிடி அளவு
3. கல் உப்பு
4. மஞ்சள்.
செய்முறை:
1. முதலில் பாத்திரத்தை எடுத்து கொள்ளவும்.
2. அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
3. ஒரு துண்டு இஞ்சியை சுத்தம் செய்து நன்கு இடித்து அதனுள் சேர்க்கவும்.
4. இரண்டு பெரிய கொத்து வேப்பிலையை எடுத்து 5 கைப்பிடி அளவு போட்டு கொள்ளவும்.
5. ஒரு தட்டு போட்டு மூடி வைத்து 10 நிமிடம் நன்கு கொதிக்க விடவும்.
6. 10 நிமிடம் கழித்து தட்டை எடுத்து கல் உப்பு ஒரு கைப்பிடி அளவு போட்டு கொள்ளவும்.
7. பின் ஒரு ஸ்பூன் அளவு மஞ்சள் தூள் சேர்க்கவும்.
8. பின் 1 நிமிடம் கொதிக்க விடவும். பின் அடுப்பை அணைத்து விடவும்.
ஆவி பிடிக்கும் முறை:
1. மேலே உள்ள தட்டை எடுக்காமல் யார் ஆவி பிடிக்க போகிறார்களோ அவர்களை போர்வையால் மூடி அதனுள் ஆவி பிடிக்கும் பாத்திரத்தை வைக்கவும்.
2. அதன் பின் மேலே உள்ள தட்டை எடுத்து கொள்ளவும்.
3. இப்பொழுது ஒரு விரலால் ஒரு பக்க மூக்கை மூடி ஒரு பக்க மூக்கின் வழியாக ஆவியை இழுத்து மறுபக்கம் வழி மூச்சை விடவும். இதே போல் 10 முறை செய்யவும்.
4. பின் வாய் வழியே ஆவி பிடித்து மூக்கின் வழியே ஆவியை விடவும். இதே போல் 10 முறை செய்யவும்.
5. இது கைகண்ட பலனை தரும். கண்டிப்பாக பயன்படுத்தி பயன் பெறுங்கள்.