இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு! ஊரடங்கு தளர்த்தப்படுமா?

0
143

தமிழ்நாட்டில் நோய்த்தொற்றின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில், இதனைக் கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு சார்பாகவும் மற்றும் மத்திய அரசு சார்பாகவும் பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக கடந்த 10ஆம் தேதி முதல் வரும் 24ஆம் தேதி வரையில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

ஆனாலும் கூட பொதுமக்கள் அதனை சரிவர பின்பற்றாததன் காரணமாக, இந்த நோய் பரவல் குறைவது போல் தெரியவில்லை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. நாள்தோறும் இந்த நோய் தொற்றுக்கு ஆளாகும் எண்ணிக்கை 35 ஆயிரத்தைத் தாண்டியிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இதற்கு காரணம் பொது மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததே என்று சொல்லப்படுகிறது. அதன் காரணமாக, இந்த நோய் தொற்றின் முதல் அலை இருந்த சமயத்தில் பிரபலங்களின் மூலம் தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்ததை போல தற்சமயமும் விளம்பரங்களை செய்து வருகிறது தமிழக அரசு.

இந்த நிலையில், நோய்த்தொற்று பரவல் அதிகரிக்க காரணம் என்ன? அது தொடர்பாக அதனை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் மற்றும் சட்டமன்ற கட்சி குழுவுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டம் ஆனது சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 10 மணி அளவில் நடைபெற இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த கூட்டத்தில் பங்குபெறும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையில் தான் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

Previous articleமுன்னாள் போலீஸ் அதிகாரி வீட்டில் இருந்து 24 உடல்கள் தோண்டி எடுத்தனர்! அதிர்ச்சியில் அதிகாரிகள்!
Next articleஅப்படி ஒரு தகவல் வந்தால் தான் எனக்கு மகிழ்ச்சி!