அப்படி ஒரு தகவல் வந்தால் தான் எனக்கு மகிழ்ச்சி!

0
58

நோய் தொற்று தடுப்பு பணி காரணமாக, ஆய்வு செய்வதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டு தினங்கள் பயணம் செய்தார். முதல் நாள் சேலம் மற்றும் திருப்பூர் சென்ற அவர் இரண்டாவது நாளாக மதுரை மற்றும் திருச்சி ஆகிய பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தார். திருப்பூரில் 18 முதல் 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு நோய் தடுப்பூசி போடும் பணி போன்றவற்றை ஆரம்பித்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின் .அதோடு மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொண்ட அவர் அதிகாரிகளுடன் நோய் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை செய்திருக்கிறார்.

மதுரையில் 500 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட நோய்த்தொற்று சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்தார். இந்த சிகிச்சை மையத்தில் முதல் கட்டமாக 200 ஆக்சிஜன் படுக்கைகள் பயன்பாட்டிற்கு வந்திருக்கின்றன.

இதனையடுத்து திருச்சிக்கு வந்த முதலமைச்சர் சாலையில் தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் அமைக்கப்பட்டிருக்கின்ற நோய் தொற்று சிகிச்சை மையத்தை ஆய்வு செய்திருக்கிறார். ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 300 பருக்கைகள் இருக்கின்ற சித்த மருத்துவ சிகிச்சைக்கு 60 படுக்கை வசதிகள் கொண்ட சிகிச்சை மையத்தை திறந்து வைத்திருக்கிறார் ஸ்டாரின். அதன்பிறகு பத்திரிகையாளர்களிடம் உரையாற்றிய அவர் நோய் தொற்று இல்லை என்று சொல்லும் நாளே எனக்கு மகிழ்ச்சியான நாள் என்று தெரிவித்திருக்கிறார்.

தடுப்பூசியைப் பொறுத்தவரையில் தமிழ்நாடு கேட்டதை மத்திய அரசு இன்று வரையில் வழங்கவில்லை எனவும், தேவையான தடுப்பூசிகளை பெறுவதற்கு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றோம் எனவும், அவர் தெரிவித்திருக்கிறார்.