நடிகர் சந்தானத்தின் உறவினர்! அமெரிக்காவிலிருந்து கொல்ல சதி திட்டம்!
திருவாரூர் அருகே உள்ள கிடாரங்கொண்டான் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபாரதி.இவருக்கு 2005 ம் ஆண்டு அமெரிக்காவில் வேலை பார்த்து வந்த விஷ்ணு பிரகாஷ் என்பவருடன் திருமணம் நடந்தது.
அதன்பின் ஜெயபாரதியும் அமெரிக்காவில் வசித்து வந்தார்.இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது.நாளடைவில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் பிரிந்து,மூன்று வருடங்களுக்கு முன் மீண்டும் தாய் வீட்டிலேயே ஜெயபாரதி தங்கி விட்டார்.
இதற்கு காரணம் அவரது கணவர் தான் என்றும் கூறப்படுகிறது.மேலும் ஜெயபாரதி விவாகரத்து கேட்டதன் காரணமாக அவரது கணவரின் வேலைக்கு பிரச்சனை ஏற்பட்டு விடும் என்று எண்ணிய அவர், ஜெயபாரதியை கொல்ல மாஸ்டர் பிளான் போட்டுள்ளார்.
ஜெயபாரதி தற்காலிகமாக அஞ்சல் துறையில் வேலைக்கு சென்று வந்துள்ளார்.வேலை முடிந்து வீடு திரும்பும்போது ஏ.டி.எம்.மில் பணம் நிரப்பும் வண்டி மோதி உயிரிழந்து உள்ளார், என்று போலீசாரால் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் ஜெயபாரதியை சரக்கு வாகனம் ஏற்றி கொலை செய்ததாக ஆதாரத்துடன் அவரது சகோதரன் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பின் நடிகர் சந்தானத்தின் பரிந்துரையின் பேரில் மாவட்ட காவல் கண்பாணிப்பாளர் கவனத்துக்கு எடுத்து செல்லப்பட்டு மறு விசாரணை செய்ய ஆணையிட்டார்.
தற்போது அது விபத்து அல்ல என்பதும், திட்டமிட்டு செய்யப்பட்டதும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.ஜெயபாரதியின் கணவர் அவரது வேலைக்கு எதும் பாதிப்பு வந்து விடுமோ? என்ற அச்சத்தில் தனது உறவினர்களான ராஜா,ஜெகன், மற்றும் செந்தில்குமார் என்பவர்களுடன் சேர்ந்து திட்டத்தை செயல் படுத்தி உள்ளார்.
அதன்படி பழைய சரக்கு வாகனம் ஒன்றை ரூ.50000 விலைக்கு வாங்கி உள்ளார்.வாகனத்திற்கு டிரைவர் ஆக பிரசன்னா என்பவர் இருந்துள்ளார்.
கடந்த வெள்ளிகிழமை வேலைக்கு சென்ற ஜெயபாரதியை பின் தொடர்ந்த அந்த வாகனம் யாருமில்லா இடத்தில் அவர் மீது வண்டியை ஏற்றி மோதியதோடு நிற்காமல் அங்கிருந்த பனைமரத்துடன் உடல் நசுங்கும் அளவுக்கு கொடூரமாக இயக்கி உள்ளனர்.
அதன்பின் அவரது உடலை ரோட்டில் போட்டு விட்டு சென்றுள்ளனர்.இது அனைத்தையும் விசாரணையின் பேரில் தெரிந்துகொண்ட போலீசார்,இதை தொடர்ந்து வாகன உரிமையாளர் செந்தில் குமார் மற்றும் ஓட்டுனர் பிரசன்னா இருவரையும் கைது செய்துள்ளனர்.
இதற்காக ஜெயபாரதியின் கணவர் சில லட்சங்களை அனுப்பிவைத்துள்ளார் என்பதும் தெரிய வந்தது.இந்த வழக்கை பற்றி இந்திய தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, எனவும் போலீசார் தெரிவித்தனர்.
இதன்மூலம் விஷ்ணு பிரகாஷ் இந்தியாவிற்கு வரவழைத்து கைது செய்யப்படுவார் என்றும் கூறுகின்றனர்.