முக்கிய ஆலோசனைவெளியாகபோகும் அறிவிப்பு!

0
64

தமிழ்நாட்டின் நோய்த்தொற்று பாதிப்பு அதிக சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது இந்த நிலையில் , பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்த படாமல் இருக்கிறது. அதோடு நீட் தேர்வு மற்றும் ஜெ ஈ ஈ போன்ற நுழைவுத் தேர்வுகளும் நடத்தப் படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்துவது தொடர்பாக நேற்று மத்திய அரசு ஆலோசனை நடத்தியது.

இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் முக்கிய கல்வி அதிகாரிகள் பங்கேற்று இருக்கிறார்கள். இந்த கூட்டத்திற்கு பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அன்பில் மகேஷ் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு நடத்தப்பட வேண்டியது அவசியம் தான் என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள் .தமிழக அரசின் நிலைப்பாடும் இதுதான் மாணவர்களின் ஆரோக்கியத்தை கருத்தில் வைத்தே தேர்வை நடத்துவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும். பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு கட்டாயமாக்கப்படும் தமிழக அரசின் நிலைப்பாட்டை செவ்வாய்க்கிழமை தெரிவித்திருப்பதாக தெரிவித்து இருக்கிறோம் என கூறியிருக்கிறார் அன்பில் மகேஷ்.

இந்த சூழலில் அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. நீட் தேர்வு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு போன்றவற்றை நடத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது. இந்த கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் தீரஜ் குமார் மற்றும் ஆணையர் நந்தகுமார் போன்றோர் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.